• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

கேரள நஜீலா தற்கொலை..கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு.. ரூமில் அடைத்து கொடூரம்.. விசாரணையில் பகீர்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் இரு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் ரெனீஸின் வரதட்சிணை கொடுமையே காரணம் என விசாரமையில் தெரியவந்தது. காவலராக பணியாற்றி வந்த ரெனீஸ் வேலைக்கு செல்லும் போது மனைவி நஜீலாவை வீட்டில் அறையில் பூட்டி வைத்து விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் ரெனீஸ். இவர் ஆலப்புழா காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நஜீலா (27) என்ற மனைவியும் திப்பு சுல்தான் என்ற 5 வயது மகன், ஒன்றரை வயதில் மலாலா என்ற மகளும் இருந்தனர்.

ரெனீஸ் குடும்பத்துடன் ஆலப்புழா நகரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி ரெனீஸ் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார்.

கொடுமை.. மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை.. 106 ஆண்டு சிறை தண்டனை.. கேரளா சிறப்பு நீதிமன்றம் அதிரடி கொடுமை.. மகளை கர்ப்பிணியாக்கிய தந்தை.. 106 ஆண்டு சிறை தண்டனை.. கேரளா சிறப்பு நீதிமன்றம் அதிரடி

 நஜீலா

நஜீலா

அப்போது அவர் தனது மனைவி நஜீலாவுக்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்கவில்லை. மீண்டும் சிறிது நேரம் கழித்து போன் செய்துள்ளார். அப்போது எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களை போனில் அழைத்து வீட்டிற்கு சென்று பார்த்து வருமாறு தெரிவித்துள்ளார்.

வீடு பூட்டியிருந்தது

வீடு பூட்டியிருந்தது

அவர்களும் வீட்டில் போய் பார்த்தபோது வீடு பூட்டியுள்ளதாக தெரிவித்தனர். இதனால் ரெனீஸ் நேராக வீடு சென்று பார்த்தார். அப்போது வீடு உள்புறமாக தாழிடப்பட்டு கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த ரெனீஸ் ஆலப்புழா போலீஸுக்கு தகவல் சொன்னார். அவர்கள் வந்து கதவை உடைத்து பார்த்த போது நஜீலா தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.

குழந்தைகள் கொலை

குழந்தைகள் கொலை

அது போல் ஒரு துணியை பயன்படுத்தி மகன் திப்பு சுல்தானின் கழுத்தை நெரித்து கொன்று ஒன்றரை வயது மலாலாவை பக்கெட்டில் நீரில் மூழ்கடித்து கொன்றது தெரியவந்தது. 3 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீஸார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விசாரணை பல பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.

நஜீலா

நஜீலா

நஜீலா தனது குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் ரெனீஸ்தான் என நஜீலாவின் உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். நஜீலாவை ரெனீஸ் அவ்வப்போது வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. திருமணத்தின் போது நஜீலா வீட்டார் வரதட்சிணையாக ரூ 40 கோடி, ரூ 10 லட்சம் , பல்சர் பைக் ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.

வரதட்சிணை புகார்

வரதட்சிணை புகார்

மீண்டும் மீண்டும் வரதட்சிணை கேட்டு துன்புறுத்தியதால் ஒரு முறை ரூ 20 லட்சமும் கொடுக்கப்பட்டது. எனினும் மீண்டும் பணம் வாங்கி வரும் படி அவரது தாய் வீட்டிற்கு அனுப்பிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் நஜீலா மறுத்ததால் அவர் யாருடனும் செல்போன் பேச அனுமதி கொடுக்கவில்லை. ரெனீஸ் வேலைக்கு செல்லும் போது ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு சென்றார்.

வரதட்சிணை கொடுமை

வரதட்சிணை கொடுமை

ரெனீஸுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பிருந்ததாக தெரிகிறது. "நீ வரதட்சிணை வாங்கி வராவிட்டால் நான் எனது சொந்தக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன்" என கூறியும் ரெனீஸ் துன்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் நஜீலா தற்கொலைக்கு முன்னர் ரெனீஸ் அவர் திருமணம் செய்து கொள்வதாக கூறிய பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும் இதனால் கணவன்- மனைவி இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் தன்னை ரெனீஸ் செய்யும் கொடுமைகளை ஒரு டைரியில் நஜீலா எழுதி வந்ததாகவும் அந்த டைரியை ரெனீஸ் மறைத்து வைத்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன. நஜீலாவின் பெற்றோர் புகாரை தொடர்ந்து ரெனீஸ் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

English summary
Kerala mother kills children and commits suicide: கேரளாவில் இரு குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் ரெனீஸின் வரதட்சிணை கொடுமையே காரணம் என விசாரமையில் தெரியவந்தது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X