திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கம்யூனிச கோட்டையான மேற்கு வங்கத்தில் பாஜக அபாரம்... கேரளாவிலும் எதிரொலிக்க வாய்ப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: எங்கே எல்லாம் இடதுசாரிகளோ அல்லது காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைகிறதோ அங்கே எல்லாம் பாஜக அசூர வேகத்தில் வளர்ந்துவிடுகிறது. இடதுசாரிகளின் கோட்டையான மேற்குவங்கத்தில் பாஜகவின் அசுர வளர்ச்சி, நிச்சயம் கேரளாவில் உள்ள இடதுசாரிகளுக்கு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

மேற்கு வங்கத்தில் சிங்கூர் டாடா ஆலையை எதிர்த்து பிரச்சாரம் செய்து மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆன மம்தா பானர்ஜி, 34 ஆண்டுகால கம்யூனிச ஆட்சியை கடந்த 2011ம் ஆண்டு வீழ்த்தினார்.அதன் பிறகு இரண்டாவது முறையாக 2016ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேற்கு வங்க முதல்வராக இரண்டாவது முறையாக மம்தா பொறுப்பேற்றார்.

எல்லாமே தப்பாதான் போகப்போகுது.. நாங்கதான் வெற்றி பெறுவோம்.. அடித்து சொல்லும் பினராயி விஜயன்! எல்லாமே தப்பாதான் போகப்போகுது.. நாங்கதான் வெற்றி பெறுவோம்.. அடித்து சொல்லும் பினராயி விஜயன்!

10 சதவீதம் வாக்கு

10 சதவீதம் வாக்கு

இந்நிலையில் 2014ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சிகள் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று கடும் வீழ்ச்சி அடைந்த அதே சமயம் பாஜக இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன் கணிசமான அளவு வாக்கு சதவீதத்தை உயர்த்தியது. இதேபோல் 2016 தேர்தலில் தனது வாக்கு சதவீதத்தை 10.16 சதவீதமாக உயர்த்தியது.

கணிப்புகள் சொல்வது

கணிப்புகள் சொல்வது

இப்போது 2019 மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில்10 முதல் 20 தொகுதிகளில் பாஜக வெல்லும் என கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. அதேநேரம் இடதுசாரிகள் அங்கு வெற்றி பெற வாய்ப்பு இல்லை என கணிப்புகள் வந்துள்ளன.

உயரும் வாக்குகள்

உயரும் வாக்குகள்

மேற்கு வங்கத்தில் பாஜகவின் வளர்ச்சியும் இடதுசாரிகளின் வீழ்ச்சியும் நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் எதிரொலிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் பாஜக கடந்த சட்டமன்ற தேர்தலில் 10.6 சதவீதம் வாக்குகள் பெற்றதோடு ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதேநேரம் காங்கிரஸ கட்சியின் வாக்கு சதவீதம் 23.8 சதவீதமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாக்கு சததீவம் 26.7 சதவீதமாக இருந்தது.

இடதுசாரிகளுக்கு எச்சரிக்கை

இடதுசாரிகளுக்கு எச்சரிக்கை

இந்த மக்களவை தேர்தலில் பாஜக கேரளாவில் ஒரு இடத்தை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தேசிய ஊடகங்கள் சொல்கின்றன. பாஜக தனது வாக்கு சதவீதத்தை கேரளாவில் இப்போது குறைந்த பட்சம் 15 சதவீதத்தை தாண்ட வைத்தாலும் அது மிகப்பெரிய வளரச்சி ஆக பார்க்கப்படும். எனவே இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் தங்கள் கோட்டையான கேரளாவை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கவும் வாய்ப்பு உள்ளது.

English summary
west bengal Exit Poll Results 2019: what say exit poll result ; bjp may win kerala like west bengal
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X