திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை தமிழர்களின் நிலை என்ன ஆகும்? பொங்கி எழுந்த பினராயி விஜயன்.. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு

குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நிலை என்ன ஆகும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்தம்.. ஏன் இது சர்ச்சையாகிறது?

    திருவனந்தபுரம்: குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நிலை என்ன ஆகும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார்.

    மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் எதிர்ப்பலைகளை சந்தித்து வருகிறது. நாடு முழுக்க பல மாநில தலைவர்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது.

    நாடு முழுக்க ஒரே கொள்கை கொண்ட நட்பான கட்சிகளை இந்த மசோதா இணைத்து இருக்கிறது. இந்த மசோதாவிற்கு எதிராக கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார்.

    மீண்டும் கருப்பு கோட்.. வக்கீலாக அதிரடி கம் பேக் தந்த ப.சி.. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாஸ் வாதம்!மீண்டும் கருப்பு கோட்.. வக்கீலாக அதிரடி கம் பேக் தந்த ப.சி.. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் மாஸ் வாதம்!

    என்ன உரிமை

    என்ன உரிமை

    இந்த மசோதா குறித்து பினராயி விஜயன் கூறி இருப்பதாவது, இந்தியாவில் இருக்கும் எல்லா இந்தியர்களுக்கும் குடியுரிமையை அடிப்படை உரிமை என்று இந்திய சட்டம் கூறுகிறது. மதம், சாதி , மொழி , கலாச்சாரம், பாலினம் கடந்து இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை உடைக்கும் அளவிற்கு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    மோசம்

    மோசம்

    மத ரீதியாக மக்களை பிரிக்கும் வகையில், மத ரீதியாக குடியுரிமை வழங்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது இந்திய இறையாண்மைக்கும், சட்டத்திற்கும் முழுக்க முழுக்க எதிரானது. மக்களை பிரித்து கலவரத்தை தூண்ட இது நினைக்கிறது.

    மூன்று நாடு

    மூன்று நாடு

    மூன்று நாட்டில் இருந்து இந்தியா வரும் 6 மதத்தினருக்கு மட்டும் சலுகை வழங்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் இதனால் இந்தியாவின் இரண்டாம் குடி மக்களாக மாறுவார்கள். இந்தியாவிலேயே அவர்கள் அகதிகளாக மாறும் சூழல் உருவாகும்.

    எதிரான சட்டம்

    எதிரான சட்டம்

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா நீதிக்கு எதிரானது.முழுக்க முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து வரும் தமிழ் அகதிகளின் நிலை என்ன.

    தமிழ் மக்கள்

    தமிழ் மக்கள்

    தமிழர்களை பற்றி மத்திய அரசு யோசிக்கவில்லை. அவர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் ஆர்எஸ்ஸுக்கு தெரியுமா?. தமிழ் அகதிகள் குறித்து சட்டத்தில் எதுவும் இல்லை, என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    What will happen to Sri Lankan Tamils? Asks Pinarayi Vijayan on Citizenship Amendment Bill
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X