திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஸ்வப்னா" சுந்தரி.. அதிகாரிகளுக்கு அடிக்கடி பார்ட்டி.. வீட்டுக்கு வந்துபோன "தலை"கள்.. அதிருது கேரளா

தலைமறைவாக உள்ள ஸ்வப்னாவை கேரள போலீசார் தேடி வருகிறார்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: அதிகாரிகளை சரி கட்டுவதற்காக, ஸ்டார் ஹோட்டலில் நிறைய "பார்ட்டி" தந்திருக்கிறாராம் ஸ்வப்னா.. மாநில அரசில் பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள்கூட, ஸ்வப்னா வீட்டுக்கு அடிக்கடி வந்து, செல்வார்களாம்.. அந்த அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு தங்க வேட்டை நடத்திய ஸ்வப்னா கேரளா போலீசார் தேடி வருகிறார்கள்.

ஸ்வப்னாவுக்கு 34 வயதாகிறது.. கேரளாவை சேர்ந்தவர்தான்.. ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்து வளர்ந்தவர்... நல்ல படிப்பு.

பிறகு, அபுதாபி ஏர்போர்ட்டில் பயணியர் சேவை பிரிவில் வேலைக்கு வந்தார். வீட்டில் கல்யாணம் செய்து வைத்தனர்.. ஆனால், என்ன ஆச்சோ தெரியவில்லை, 2014-ல் டைவர்ஸ் வாங்கி கொண்டு கேரளா வந்துவிட்டார்.

அன்று சோலார் சரிதா இன்று தங்கம் ஸ்வப்னா - கேரளா அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள் அன்று சோலார் சரிதா இன்று தங்கம் ஸ்வப்னா - கேரளா அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள்

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன அலுவலகத்தில் வேலை பார்த்தார்.. அங்கே சும்மா இல்லாமல், சக ஊழியர் மீது பொய்யான ஒரு புகார் தந்து அந்த அப்பாவியை சிக்க வைத்தார்.. போலீசார் விசாரிக்கும்போதுதான் தெரிந்தது, ஸ்வப்னா தந்தது பொய் புகார் என்று.. பிறகு ஸ்வப்னாவை வார்ன் செய்து அனுப்பி வைத்தனர் போலீசார்.

தங்கம் கடத்தல்

தங்கம் கடத்தல்

இதற்கு பிறகு அரபு எமிரேட்ஸ் தூதரகத்தில் நிர்வாக செயலாளராக வேலை பார்த்தார்.. கொஞ்சம் பெரிய வேலை.. அதனால் புத்தி வேற வெலலுக்கு யோசித்தது.. தங்கம் கடத்தினால் என்ன என்று சதி திட்டம் தீட்ட தொடங்கினார்.. இதற்காக பல வகையில் தனது ஐடியாக்களை விஸ்தரித்தார்.. தினமும் ஏதாவது ஒரு பிளான் போட்டபடியே இருந்தார்.. அதுக்கான நேரத்துக்கு காத்து கொண்டிருந்த நேரத்தில்தான்தான், திரும்பவும் ஒரு பிரச்சனையில் சிக்கினார்.. அதனால் அந்த தூதரக பணியில் இருந்து வெளியேறினார்.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

இதற்கு பிறகு கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் கான்ட்டிராக்ட் வேலைக்கு சேர்ந்தார்.. அந்த நேரத்தில், தன் மீதான வழக்குகளை மறைத்து வேலைக்கு சேர்ந்ததால் போலீசில் சிக்கி கொண்டார்.. இதனால் போலீசார் விசாரணைக்கும் ஆளானார்... ஆனால் மேலிடத்து பிரஷர் வந்துவிடவும், விசாரணையில் இருந்து போலீசார் பின்வாங்கி கொண்டதாக தெரிகிறது.

அதிகாரிகள்

அதிகாரிகள்

கேரள மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வந்தாலும், ஏற்கனவே வேலை பார்த்த தூதரக அலுவலக அதிகாரிகளுடன் தொடர்பிலேயே இருந்து வந்தார்.. அப்போதுதான், போலி ஆவணங்கள் தயாரித்து தூதரகத்தின் சிறப்பு அந்தஸ்தை தவறாக பயன்படுத்தி, தங்க கடத்தலையும் செய்ய ஆரம்பித்தார். வழக்கமாக, தூதரகத்துக்கு வரும் பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்ய முடியாது என்பது பொதுவான விதி.

அதிரடிகள்

அதிரடிகள்

இதைதான் ஸ்வப்னா சரியாக பயன்படுத்தி கொண்டு காய் நகர்த்தினார். ஒருமுறை தங்கம் கடத்தினால் ஸ்வப்னாவுக்கு 25 லட்ச ரூபாய் கிடைக்குமாம்.. இப்படித்தான் ஸ்வப்னா சிக்கியது.. அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. ஆனால் அவர் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்... பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த சூழலிலும் ஸ்வப்னாவை காப்பாற்ற முயற்சிகள் நடந்ததாக சொல்கிறார்கள்..

ஸ்டார் ஓட்டல்

ஸ்டார் ஓட்டல்

தூதரக அதிகாரிகளை சரி கட்டுவதற்காக, அவர்களுக்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நிறைய "பார்ட்டி" தந்திருக்கிறாராம்.. திருவனந்தபுரத்தில், இருக்கு சொகுசு பங்களா உள்ளதாம்.. இதன் மதிப்பு நிறைய கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள்.

ஸ்வப்னா எங்கே

ஸ்வப்னா எங்கே

மாநில அரசில் உயர்ந்த பொறுப்பில் உள்ள சில அதிகாரிகள்கூட, ஸ்வப்னா வீட்டுக்கு அடிக்கடி வந்து, செல்வார்களாம்.. அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டு, ஆட்டம் காட்டி உள்ளார் ஸ்வப்னா.. அத்துடன் தங்க வேட்டையையும் சேர்த்து நடத்தி உள்ளார்.. ஸ்வப்னா விஷயத்தை கேட்டு தலை சுற்றி போயுள்ளனர் கேரள மக்கள்

English summary
who is swapna suresh in kerala gold smuggling case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X