India
  • search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரெக்ட்டா மாலை போடும்போது.. திபுதிபுவென ஓடிய கல்யாண பெண்.. மாப்பிள்ளைக்கு செம டென்ஷன்.. ட்விஸ்ட்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கழுத்தில் மாலை போடும் நேரத்தில் திடீரென மணப்பெண், மணமேடையைவிட்டு ஓடிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கேரளாவில் ஏற்படுத்தி வருகிறது.
எத்தனையோ கல்யாணங்கள் தாலி கட்டுவதற்கு முன்பு நின்றுள்ளன.. அதில் ஆணோ, பெண்ணோ, இருவரில் யாராவது ஒருவர் காதல் விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.. அல்லது வரதட்சணை பிரச்சனைகள் ஏதாவது வெடித்துவிடும்.

இதனால் மணமேடை வரை வந்து திருமணங்கள் நின்றிருக்கின்றன.. அல்லது அதே கல்யாண மண்டபத்தில் யாரையாவது மாப்பிள்ளை, பெண்ணை பார்த்து திடீர் திருமணங்களும் நடந்துவிடும் நிகழ்வுகளும் உண்டு.

 கண்ணை மூடுங்க.. சர்பிரைஸ் கிப்ட் தரேன்.. மணமகனின் கழுத்தை அறுத்த மணப்பெண்.. ஆந்திராவில் பரபரப்பு கண்ணை மூடுங்க.. சர்பிரைஸ் கிப்ட் தரேன்.. மணமகனின் கழுத்தை அறுத்த மணப்பெண்.. ஆந்திராவில் பரபரப்பு

மணப்பெண்

மணப்பெண்

மாப்பிள்ளை 2-ம் வாய்ப்பாட்டை சொல்லாதது , உருது வார்த்தைகளை சொல்லாதது, உள்ளிட்ட வினோத காரணங்களுக்காகவும் மணப்பெண்கள் தங்கள் கல்யாணத்தையே நிறுத்திய சம்பவங்களும் நம் நாட்டில் சமீப காலமாக அரங்கேறி வருகின்றன.. இப்படி கடைசி நேரம் நின்றுவிட்ட திருமணங்களில், பெரும்பாலும் மணப்பெண்களே காரணமாக இருந்திருக்கிறார்கள்.. அந்த வகையில், கேரளாவிலும் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

 கல்யாண பெண்

கல்யாண பெண்

கேரள மாநிலம் கொல்லம் அருகே மண்துருத்தி பகுதியை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. இவருக்கும் கல்லுநாகம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.. பிறகு, இரட்டகுளங்கரை பகுதியில் உள்ள கோவில் மண்டபத்தில் திருமணமும் செய்ய நாள் குறிக்கப்பட்டுள்ளது.. அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து வந்தன... முகூர்த்த நாள் வந்தது.

நண்பர்கள்

நண்பர்கள்

மண்டபத்தில் உறவினர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோர் சூழ்ந்திருந்தனர்.. மணமேடையில் மணமகன் தயாராக நின்றிருந்தார்.. மணமேடைக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார்.. மணமகன் அருகில் நிற்க செய்து, அவர் கழுத்தில் மாலையை போட சொன்னார்கள்.. மாப்பிள்ளையும் மாலையை எடுத்து மணமகளுக்கு அணிவிக்க போனார்.. அப்போது, மாப்பிள்ளையை மணப்பெண் தடுத்து நிறுத்தினார்.. பிறகு, திடீரென மணமேடையில் இருந்து கீழே இறங்கி ஓடிவிட்டார்...

மணமகள்

மணமகள்

உறவினர்கள், குடும்பத்தினர் எதுவும் புரியாமல் விழித்தனர்.. மணமகளை தடுத்து நிறுத்த முயன்றனர்.. ஆனால், முடியவில்லை.. மணப்பெண் ரூமுக்குள் சென்று உள்பக்கமாக தாழிட்டு கொண்டார்... இதனால் மண்டபமே அதிர்ச்சியில் உறைந்தது. எவ்வளவோ தட்டியும் அந்த பெண் கதவை திறக்கவில்லை... இதனை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அவர்கள் விரைந்து வந்து பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர்... அப்போதுதான், மணமகளின் காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது..

அதிர்ச்சி

அதிர்ச்சி

இன்னொரு நபரை காதலிப்பதாகவும், பெற்றோரின் கட்டாயத்தில் தான் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததாகவும் அந்த பெண் போலீசாரிடம் சொன்னார்.. பிறகு, இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் சமாதானம் செய்ததுடன், பெண்ணுக்கும் சமாதானம் செய்தனர்.. ஆனால் அப்போதும், மணப்பெண் பிடிவாதமாக திருமணம் வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்...

 கல்யாண மேடை

கல்யாண மேடை

இறுதியாக, பெண்வீட்டார் மணமகன் வீட்டாருக்கு நஷ்டஈடு கொடுக்க ஒப்புக் கொண்டதையடுத்து, மண்டபத்தில் இருந்து அனைவரும் வெளியேற ஆரம்பித்தனர்.. அப்போது போலீசார், "கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்றால், முதலிலேயே சொல்லி இருக்க வேண்டும், சம்பந்தமில்லாத இளைஞரை மணமேடை வரை அழைத்து வந்து இப்படியெல்லாம் அசிங்கப்படுத்த கூடாது" என்று மணப்பெண்ணுக்கு அட்வைஸ் தந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

English summary
last minute why did the young woman stop off her wedding last minute and what happened actually in kollam kerala state
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X