• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

மிட்நைட்டில் "கைமாறிய" மனைவிகள்.. குமட்டும் ஆபாசம்.. யார் அந்த விவிஐபி?.. திணறி போன போலீஸ்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மனைவிகளை மாற்றி கொள்ளும் வழக்கு விசாரணையில் திடீர் சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, அடுத்தக்கட்டத்துக்கு நகர முடியாமல் போலீசாரிடம் சுணக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. அத்துடன், இந்த விவகாரத்தில் யாரோ ஒரு அரசியல்வாதியின் ஆதரவு பின்புலமாக இருந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரியை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் தன்னுடைய கணவன் குறித்து புகார் தெரிவித்திருந்தார்..

தன்னை, தன்னுடைய நண்பர்களுடன்உறவில் ஈடுபட கணவர் வற்புறுத்துவதாகவும், அவரிடமிருந்து தன்னை காப்பாற்றும்படியும் புகாரில் கூறியிருந்தார்..

இவங்கெல்லாம் யார் தெரியுமா.. எல்லாமே என் மனைவிகள்.. புது மனைவிக்கு ஷாக் கொடுத்த இளைஞர் இவங்கெல்லாம் யார் தெரியுமா.. எல்லாமே என் மனைவிகள்.. புது மனைவிக்கு ஷாக் கொடுத்த இளைஞர்

விசாரணை

விசாரணை

அதற்கு பிறகு போலீசாரும் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட கணவர் உட்பட 7 பேரை கைது செய்தனர்.. பிறகு 5 பேரை கைது செய்தனர்.. இவர்கள் இன்ஸ்டாகிரம், டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்ட குழுக்களை தொடங்கியதும், இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்திருப்பதும் தெரியவந்தது.

 அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான், மனைவிகளை மாற்றி உடலுறவு கொள்ளும் இந்த குழுவில் தமிழக பிரமுகர்களும் இருக்கிறார்கள் என்பதும், தமிழ்நாட்டை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும், அவர்களின் மனைவிகளும் சிக்கி இருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளியானது.. இவர்களில் பெரும்பாலும் டாக்டர்கள், வக்கீல்கள், அரசியல்வாதிகள் என்ற முக்கிய புள்ளிகள் என்பதா, இவர்கள் மீது சந்தேகமும் யாருக்கும் வராமல் இருந்ததும் தெரியவந்தது. இவர்களை கண்டுபிடிக்க கேரள சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

உடலுறவு

உடலுறவு

இந்நிலையில், இந்த வழக்கில் மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. பெரும் இந்த குழுவில் இருக்கும் கணவர்களின் வற்புறுத்தலால்தான் பெண்கள் பிறருடனான உடலுறவுக்கு சம்மதம் சொல்லி உள்ளனர்.. விருப்பமின்றியே இப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்... இந்த குரூப்கள் 2 வருடங்களுக்கும் மேலாகவே செயல்பட்டு வருகிறது.. ஆரம்பத்தில் சிலரது மனைவிகள், இந்த குரூப்பில் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டினாலும், நாளடைவில் தம்பதிகளுக்குள் தகராறு உருவெடுத்துள்ளது..

உடலுறவு

உடலுறவு

கணவன் தரும் டார்ச்சர் தாங்காமல் சில பெண்கள் கணவன்மார்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்களாம்.. மேலும் சிலர் விவாகரத்து கோரியுள்ளனராம்.. ஒருசில பெண்கள் தற்கொலையே செய்து கொண்டுள்ளார்களாம்.. இனியும் இப்படியெல்லாம் நடக்க கூடாது என்பதால்தான், பாதிக்கப்பட்ட பெண்களிடம் இது குறித்து புகார் அளிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டனர். .. அப்படி யார் மீதேனும் புகார் தந்தால், அவர்களின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதி தந்திருந்தனர்..

 அட்டூழியங்கள்

அட்டூழியங்கள்

ஆனால் புகாருக்கு ஆளான பெண்கள் பலரும், குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் பயந்து போலீசில் புகார் அளிக்க மறுத்து வருகிறார்களாம். இது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது... இப்போதைக்கு ஒரே ஒரு பெண் மட்டுமே தைரியமாக புகார் அளித்துள்ளார்... அதற்கே இத்தனை விஷயங்களும் வெளிவந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் புகார் தந்தால், எத்தனையோ அதிர்ச்சி தகவல்கள் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.. அதுமட்டுமல்லாமல், இத்தனை அட்டூழியங்களையும் அரசியலின் பின்புலத்துடன் இல்லாமல் நடத்தியிருக்க முடியாது என்றும், யாரோ ஒரு அரசியல் தலையீடும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் யூகிக்கப்படுகிறது..

 முக்கிய பிரமுகர்கள்

முக்கிய பிரமுகர்கள்

ஆனால் எதுவாக இருந்தாலும், சம்பந்தப்பட்ட பெண்கள் புகார் தந்தால்தான், தொடர்புடைய நபர்களை முழுமையாக கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முடியும் என்று போலீசார் கருதுகிறார்கள்... ஆனால் புகார் சொல்ல பெண்கள் தயங்குவதால், இந்த வழக்குதில் திடீர் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.. அடுத்தக்கட்டத்துக்கு இந்த வழக்கை கொண்டு செல்ல முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.. இதனிடையே, போலீசாரின் விசாரணை வேகமெடுத்ததை தொடர்ந்து இக்குழுவில் இருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் தலைமறைவாகி விட்டனர்... அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனராம்..!

ஓட்டல் ரூம்கள்

ஓட்டல் ரூம்கள்

இதனிடையே இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. கடந்த ஒன்றரை வருடங்களாகவே கொரோனாவின் 2ம் அலை தீவிரமாகி வந்ததால், அனைத்து ரிசார்ட்டுகளும், ஹோட்டல்களும் மூடப்பட்டிருந்தன.. ஆனால், இந்த கும்பல் மட்டும் கொரோனா காலத்திலும் செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. சில பண்ணை வீடுகளையும் இதற்காகவே பயன்படுத்தி கொண்டுள்ளனர்.. விடுமுறை நாட்களிலும், வீடியோ கால்கள் மூலமாகவும் தொடர்பில் கால்மூலம் நண்பர்களின் மனைவிகளுடன் தொடர்பில் இருப்பார்களாம்.. அதற்கு பிறகுதான் ஓட்டல் ரூம்களை தேர்ந்தெடுக்காமல் தங்களின் வீடுகளுக்கே மனைவியுடன் வரசொல்லி ஜாலியாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

English summary
Wife swapping case issue and women refused complaint against VIPs
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Desktop Bottom Promotion