"சபலம்".. தலைக்கேறிய காமம்.. லிங்க்கை திறந்ததுமே நிரம்பி வழிந்த ஆபாசம்.. மனைவிகள் மாற்றத்தில் பகீர்
திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் வழக்கு தொடர்பாக மேலும் சில பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன... குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண், போலீசில் எப்படி புகார் தர துணிந்தார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.
தன்னை, நண்பர்களுக்கு கணவன் விருந்தாக்குவதாகவும், எப்படியாவது அவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும் பெண் ஒருவர் கேரள போலீசில் புகார் தந்தார்..
அதற்கு பிறகுதான் இப்படி ஒரு விவகாரமே வெளியே தெரிய ஆரம்பித்தது.. அதிர்ச்சி அடைந்த போலீசாரும் பெண்ணின் கணவரை கைது செய்தனர்...
ராத்திரிகளில்.. மனைவிகளை தூங்க விடாமல் "டார்ச்சர்" செய்த கணவன்கள்.. எகிறி தப்பிய "விஐபி"

விசாரணை
அவரிடம் விசாரணை நடத்தியபோது, கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்களில் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்படுவது தெரிய வந்தது... அந்த கணவர் கொடுத்த தகவலின்பேரில், இக்குழுவிற்கு மூளையாக செயல்பட்ட மேலும் 5 பேர் கைதானார்கள்.. அவர்களின் செல்போன், லேப்டாப்களை போலீசார் பறிமுதல் செய்தனர்..

அதிர்ச்சி தகவல்கள்
அவற்றை சைபர் கிரைம் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்துள்ளனர்.. அதில், மனைவி மாற்றும் குழுக்கள் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்திருக்கிறது.. இந்த பாதிக்கப்பட்ட பெண், கணவரை காதல் திருமணம் செய்து வளைகுடா நாட்டில் வசித்து வந்திருக்கிறார்.. அப்போதுதான், கணவரின் நண்பர் மூலமாக, மனைவி மாற்றும் குழுவின் லிங்க் கிடைத்துள்ளது... அந்த லிங்க்கை திறந்து பார்த்ததும், ஏகப்பட்ட ஆபாச படங்கள் இருந்துள்ளன..

சபலம்
மேலும், மனைவிகளை பிறருடன் பகிர்ந்து கொண்டு ஜாலியாக இருக்கலாம் என்ற தகவலும் இருந்துள்ளது.. இதை பார்த்து சபலமடைந்துள்ளார் அந்த பெண்ணின் கணவர்.. அதனால் அவர் முதலில் அந்த குழுவில் இணைந்துவிட்டு, அதற்கு பிறகு மனைவியையும் குரூப்பில் சேர்த்துள்ளார்.. ஆரம்பத்தில் கணவரின் ஆசைக்காக பிறருடன் உல்லாசமாக இருந்திருக்கிறார் சம்பந்தப்பட்ட பெண்.. ஆனால், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட மறுப்பு தெரிவித்திருக்கிறார்..

வீடியோக்கள்
கணவர் தொடர்ந்து வற்புறுத்தியதோடு மனைவியை மிரட்டவும் ஆரம்பித்துள்ளார்.. ஆரம்பத்தில் பிறருடன் உடலுறவு கொண்ட வீடியோக்களை காட்டியே மிரட்டி பணிய வைத்துள்ளார்... அந்த வீடியோவை சொந்தக்காரர்களுக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.. இதற்கு பயந்துதான் அந்த பெண் வாய் திறக்காமல் இருந்துள்ளார்.. இந்த கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகவும், தன்னுடைய சகோதரரிடம் சொல்லி அழுதுள்ளார். அந்த சகோதர்தான் போலீசாரிடம் இதை பற்றி புகார் சொல்லும்படி தெரிவிக்க அறிவுறுத்தினாராம்..!