திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவை அதிர வைத்த 'மனைவி மாற்றம்' சம்பவம்.. 4 'கணவர்களுக்கு' நீதிமன்ற காவல்

Google Oneindia Tamil News

ஆழப்புழா: மனைவிகளை மாற்றி உறவு கொண்ட குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த 4 பேர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டம் காயங்குளம் காவல் சரகத்திற்கு உட்பட்டவர் ஷபின் அவரது மனைவி சிந்து (32), (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ஷேர்சாட் ஆப் மூலமாக wife swapping தொடர்பாக பலருடன் ஷபினுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இப்படி பழகிய நண்பர்களுடன், மனைவிகளை மாற்றிக் கொண்டு உல்லாசம் அனுபவிப்பது ஷபின் வாடிக்கையாக இருந்தது.

கேரளாவை உறைய வைத்த மனைவி மாற்றம் சம்பவங்கள்.. பெண் புகாரால் அம்பலமான அசிங்கம்கேரளாவை உறைய வைத்த மனைவி மாற்றம் சம்பவங்கள்.. பெண் புகாரால் அம்பலமான அசிங்கம்

காவல் நிலையத்தில் புகார்

காவல் நிலையத்தில் புகார்

ஒருகட்டத்தில் பல ஆண்களுடன், சிந்துவை ஒரே நேரத்தில் உறவு கொள்ள வைத்துள்ளார் ஷபின். சில ஆண்கள் ஆவேசமாக நடந்து கொண்டதாக சிந்து அழுது புலம்பியும், ஷபின் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனால் காயங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சிந்து. இந்த புகாரை பார்த்து போலீசார் முதலில் அதிர்ந்து போய்விட்டனர்.

பலாத்கார வழக்கு

பலாத்கார வழக்கு

காவல்துறை நடத்திய விசாரணையில், ஷபின் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பலாத்காரம், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நால்வர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இருப்பினும், மாற்று உறவில் இவர்களது மனைவிகள் கைது செய்யப்படவில்லை.

நடுத்தர வயது ஆண்கள்

நடுத்தர வயது ஆண்கள்

கைது செய்யப்பட்ட அனைவருமே 23 முதல் 38 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். நடுத்தர குடும்பத்தை பின்னணியாக கொண்டவர்ரகள். கேரளாவில் இதுபோல சமூக ஊடகங்களை பயன்படுத்தி, மனைவி மாற்றி உறவு கொள்ளும் கலாச்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது இதுதான் முதல் முறையாகும். இன்னும் பலரும் இதுபோன்ற அசிங்கச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.

14 நாட்கள் நீதிமன்ற காவல்

14 நாட்கள் நீதிமன்ற காவல்

கைது செய்யப்பட்ட 4 ஆண்களும், காயங்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கிருஷ்ணாபுரம், காயங்குளம், வவ்வக்காவு, கேரளபுரம், கொல்லம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காயங்குளம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஷரோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

English summary
The four persons arrested in connection with the alleged incident involving wife swapping on Saturday were sent to 14-days judicial custody by the Kayamkulam Judicial First Class Magistrate Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X