திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Breaking News Live: பசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள்.. பாஜக பெரும் போராட்டம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் சன்னிதானத்தில் இன்று அதிகாலை 50 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் சென்று பூஜை நடத்தி விட்டு திரும்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதையடுத்து பெண்கள் சிலர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல முயன்றனர். ஆனால் அவர்களை ஆண் பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். எனவே, இத்தனை நாட்களாக 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் யாரும் சபரிமலை செல்ல முடியாதநிலையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று பூஜை நடத்தி விட்டு திரும்பியுள்ளனர்.

Women enters Sabarimala Ayyappa Temple - Live updates

அந்த நேரத்தில் அங்கு பக்தர்கள் கூட்டம் மிக குறைவாக இருந்ததை பயன்படுத்தி பெண்களை போலீசார் சன்னிதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் பக்தர்கள் மத்தியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பெண் போராளிகள் இந்த சம்பவத்தை கொண்டாடி வருகின்றனர்.

Newest First Oldest First
1:29 PM, 2 Jan

கேரள தலைமைச்செயலகம் முன் பாஜகவினர் போராட்டம்

சபரிமலைக்குள் பெண்கள் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

திருவனந்தபுரம், கொச்சி, கோட்டயம், கொல்லத்திலும் போராட்டம்

பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடக்கிறது

11:38 AM, 2 Jan

பரிகார பூஜைக்கு பிறகு சபரிமலை நடை திறக்கப்பட்டது
11:24 AM, 2 Jan

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பரிகார பூஜை நடப்பதாக தகவல்

ஐயப்பன் சன்னிதியில் பெண்கள் தரிசனம் செய்ததால் நடை அடைக்கப்பட்டு பூஜை

10:35 AM, 2 Jan

சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் மூடப்பட்டது

கோயிலுக்குள் பெண்கள் சென்றதால் நடை சாத்தப்பட்டது

10:28 AM, 2 Jan

50 வயதுக்கு குறைவான 2 பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழைந்தனர்

அதிகாலை 3.45 மணிக்கு இரண்டு பெண்கள் கோவிலுக்குள் நுழைந்தனர்

English summary
Two women both in their early for 40s enter the Sabarimala shrine early this morning, which leads devotees entering into protest. You can join here to know the live updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X