திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சபரிமலையில் பதட்டம்.. 30 வயது பெண் நுழைய முயன்றதால் பக்தர்கள் போராட்டம்

ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை நடைப்பந்தல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் சரண கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 30 வயதுடைய அஞ்சு என்ற பெண் உள்ளே நுழைய முயன்றபோது அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

சித்திரை திருநாள் மன்னரின் பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப் பட இருக்கிறது. இதனால் ஏற்கனவே நடந்த கலவரம், போராட்டம் போன்று இந்த முறையும் எதுவும் நடந்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

[எஸ்.ஐ-யை அறைக்குள் பூட்டிவிட்டு தப்பி ஓடிய வட மாநில கொள்ளையர்கள்.. விரட்டி பிடித்த போலீஸார்!]

 கேமராக்கள்

கேமராக்கள்

அதில் குறிப்பாக சபரிமலையில் நேற்று முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதை தவிரி 20 கமாண்டோ படையினர், 2300 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். எல்லா இடங்களிலும் குறிப்பாக நிலக்கல், முதல் சன்னிதானம் வரை எண்ணற்ற கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 பெண் போலீசார்

பெண் போலீசார்

மேலும் சபரிமலைக்கு பெண்கள் யாரும் வர வேண்டாம் என்று ஐயப்ப பக்தர்கள் அமைப்பு மற்றும் போராட்டக்குழுவினர் சார்பில் வேண்டுகோள் விடுத்தனர். அதேபோல செய்தி சேகரிக்க பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம் என்றும் கேரள இந்து அமைப்பினர் கேட்டுக் கொண்டனர். அப்படி மீறி வந்தால் அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டனர். முக்கியமாக இன்று முதல் பெண் போலீசார் சபரிமலை நடை பந்தல் வரை பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளார்கள். இவர்கள் அனைவருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்.

 நடைபந்தலில் முழக்கம்

நடைபந்தலில் முழக்கம்

இந்நிலையில் இன்று காலை சபரிமலை கோயிலுக்குள் 50 வயதுக்கு மேற்பட்ட 3 பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தங்களது அடையாள அட்டை காண்பித்த பிறகு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 30 வயது மதிக்கத்தக்க அஞ்சு என்ற பெண் ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்தார். கூடவே அவருடைய கணவரும் 2 குழந்தைகளும் வந்தனர். அஞ்சுவை பார்த்ததும் அங்கிருந்த பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைப்பந்தல் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் சேர்ந்து சரண முழக்கமிட்டனர்.

உரிய பாதுகாப்பு

இது தொடா்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, அஞ்சு தற்போது வரை கோவிலுக்குள் செல்ல பாதுகாப்பு கோரவில்லை. அவ்வாறு கோவிலுக்குள் செல்ல பாதுகாப்பு வேண்டும் என்று அவா் கோாினால், காவல் துறையினா் உரிய பாதுகாப்பு வழங்குவாா்கள் என்று கூறினார்.

 காத்திருப்பு போராட்டம்

காத்திருப்பு போராட்டம்

இந்த போராட்டத்தில் அம்ரிதா தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் பிஜூ என்பவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த போராட்டக்காரர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே பெண் செய்தியாளர்கள் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தும் ஒரு பெண் பத்திரிகையாளர் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 பெண் பத்திரிகையாளர்

பெண் பத்திரிகையாளர்

ஒரு பக்கம் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு மறு பக்கம் 50 வயதுக்கு கீழுள்ள பெண் மற்றும் பெண் பத்திரிகையாளரின் காத்திருப்பு போராட்டம் என அங்கு பதட்டம் நிலவி வருகிறது.

English summary
Women try to enter Sabarimala .. Ayyappa devotees struggle
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X