திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது... கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் என்ன நடந்தாலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து 2015ஆம் ஆண்டுக்கு முன் இந்தியாவுக்குள் வந்த மத சிறுபான்மை அகதிகளுக்குக் குடியுரிமையை வழங்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வந்தது.

ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் ஒதுக்கும் வகையில் இந்தச் சட்டம் இருப்பதாகக் கூறிநாடு முழுவதும் இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும், மத்திய அரசு இச்சட்டத்தைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

விரைவில் சிஏஏ

விரைவில் சிஏஏ

மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜகவின் பல்வேறு முக்கிய தலைவர்களும் மேற்கு வங்கத்தில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய அமித் ஷா, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடிந்தவுடன், சிஏஏ சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்குக் குடியுரிமை வழங்கும் பணிகள் தொடங்கும் என்றார்.

தெரிவித்து விட்டோம்

தெரிவித்து விட்டோம்

உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்குப் பல எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரித்து வருகின்றனர். இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "குடியுரிமை திருத்தச் சட்டம் கொரோனா தடுப்பூசி பணிகளுக்குப் பின் செயல்படுத்தப்படும் என்று உள் துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவாகத் தெரிவித்துவிட்டோம்.

செயல்படுத்த முடியாது

செயல்படுத்த முடியாது

இந்த பேரழிவு கேரளாவில் நடைபெற இந்த அரசு ஒருபோதும் அனுமதிக்காது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரு சட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் என்று ஒரு மாநில அரசால் எப்படிச் சொல்ல முடியும் என்பது போலக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நான் ஒன்றை மட்டும் தெளிவாக மீண்டும் கூறிக்கொள்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாங்கள் ஒருபோதும் செயல்படுத்த மாட்டோம்" என்றார்.

கேரளா திட்டவட்டம்

கேரளா திட்டவட்டம்

கடந்த 2019ஆம் ஆண்டு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் நாடு முழுவதும் மிகப் பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்றன. குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் நடைமுறைப்படுத்தப்படாது என்று கேரள அரசு கடந்த ஆண்டே அறிவித்திருந்தது. மேலும், இச்சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள கேரள அரசு, உச்ச நீதிமன்றத்திலும் இச்சட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

English summary
Chief Minister Pinarayi Vijayan said that Kerala will not implement the centre's controversial citizenship law.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X