சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது.. ஒரு சீட் ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்தது- வீடியோ

    சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் இடையே, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    அதிமுக, பாஜக, பாமக, புதிய தமிழகம், தேமுதிக, புதிய நீதிக் கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஓரணியாக கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிடுகின்றன. இதில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு கட்சி தமிழ் மாநில காங்கிரஸ். ஆனால் இதுவரை கூட்டணி ஏற்படாமல் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று மாலை சென்னை கிரவுண்ட் பிளாசா என்ற ஹோட்டலில், அதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நடுவே கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    Aiadmk and Tamil maanila Congress making an Alliance

    இதையொட்டி அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் ஹோட்டலுக்கு வந்திருந்தனர். இதன்பிறகு, கூட்டணிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதிதான் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், தமிழ் மாநில காங்கிரசை அதிமுக கூட்டணியில் சேர்க்க சிக்கல் இருந்திருக்கும். தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால், வாசன் கட்சிக்கு காலதாமதமாக சீட் ஒதுக்கப்பட்டுள்ளதாக பின்னர் நிருபர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.

    சென்னை கல்லூரியில், ப்ரோட்டோக்காலை மீறிய ராகுல் காந்தி.. பரபர வீடியோசென்னை கல்லூரியில், ப்ரோட்டோக்காலை மீறிய ராகுல் காந்தி.. பரபர வீடியோ

    21 சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு த.மா.கா ஆதரவு அளிக்கும் என்றும், தற்போதைய நிலவரப்படி, கூட்டணி பேச்சுவார்த்தைகள் தற்காலிகமாக நிறைவடைந்துள்ளது என்றும் ஓபிஎஸ் மேலும் கூறினார்.

    முன்னதாக நிருபர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தை கண்டித்ததோடு, குற்றவாளிகளுக்கு உட்சகட்ட தண்டனை வழங்க வேண்டும் என்று, கேட்டுக்கொண்டார்.

    English summary
    Aiadmk and Tamil maanila Congress making an Alliance for the upcoming Lok Sabha election 2019.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X