For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொழுதுபோக்கு

By Staff
Google Oneindia Tamil News

Abirami Mega Mall
இந்தியாவின் 4-வது பெரிய நகரமாக விளங்கும் சென்னை மாநகரில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உள்ளன. பொழுதுபோக்குவதற்கு நகரின் பெரிய இடமாக விளங்குவது மெரினா கடற்கரையாகும். இது தவிர, நிறைய பூங்காக்கள், குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்கள், கிளப்புகள், தீம் பார்க்குகள், விஜிபி கோல்டன் பீச், கோவளம் கடற்கரை, முட்டுக்காடு படகுக் குழாம், அம்யூஸ்மெண்ட் பார்க்குகள், டிஸ்கொத்தேக்கள் என நிறைய உள்ளன. இவை தவிர, விளையாட்டுடன் பொழுதுபோக்க பில்லியர்ட்ஸ் கிளப்புகள், பெளலிங் பாயிண்ட்டுகள் போன்ற இடங்களும் நிறைய உள்ளன.

தியேட்டர்கள்

சென்னை நகரில் ஏராளமான குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்கள் உள்ளன. ஆனால், ஏறத்தாழ 5 ஆண்டுகளுக்கு முன் இருந்த எண்ணிக்கையை விட தற்போது பாதி எண்ணிக்கையில்தான் தியேட்டர்கள் உள்ளன. நன்றாக வசூலாகிய தியேட்டர்கள் கூட இடிக்கப்பட்டு அந்த இடத்தில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.

இருப்பினும் தற்போதும் சென்னை நகரில் 50-க்கும் அதிகமான தியேட்டர்களில் படங்கள் திரையிடப்படுகின்றன. முக்கியமாக தமிழ் திரைப்படங்கள்தான் அதிக அளவில் திரையிடப்பட்டாலும் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களும் திரையிடப்படுகின்றன.

சென்னை நகரில் ஒரே வளாகத்தில் 2-க்கும் மேற்பட்ட திரையரங்கள் நிறைய உள்ளன. அதிகபட்சமாக தேவி திரையரங்க வளாகத்தில் 4 தியேட்டர்கள் உள்ளன. தற்போது பெரும்பாலான தியேட்டர்களுக்குத் தொலைபேசியில் தெரிவித்தால் வீட்டுக்கே டிக்கெட் வந்து சேரும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்கள் விவரம்:

அபிராமி காம்ப்ளக்ஸ் : (4 தியேட்டர்கள் - அபிராமி, அன்னை அபிராமி, சக்தி அபிராமி, பால அமிராமி)- புரசைவாக்கம். தொ.பே. 6423377.

ஆல்பர்ட் காம்ப்ளக்ஸ் :(2 தியேட்டர்கள் - ஆல்பர்ட், பேபி ஆல்பர்ட்) - எழும்பூர். தொ.பே. 8535431.

தேவி காம்ப்ளக்ஸ் : (4 தியேட்டர்கள் - தேவி, தேவிபாரடைஸ், தேவிபாலா, தேவிகலா)- அண்ணா சாலை. தொ.பே. 8555660.

ஆனந்த் : (2 தியேட்டர்கள் - ஆனந்த், லிட்டில் ஆனந்த்) - அண்ணா சாலை. தொ.பே. 8524412.

சங்கம் காம்ப்ளக்ஸ் : (3 தியேட்டர்கள் - சங்கம், பத்மம், ரூபம்) - கீழ்ப்பாக்கம். தொ.பே.6411975.

சத்யம் காம்ப்ளக்ஸ் : (3 தியேட்டர்கள் - சத்யம், சாந்தம், சுபம்)- ராயப்பேட்டை. தொ.பே. 8523813.

உதயம் காம்ப்ளக்ஸ் : (3 தியேட்டர்கள் - உதயம், சூரியன், சந்திரன்) - கே.கே. நகர். தொ.பே. 4822227.

உட்லண்ட்ஸ் காம்ப்ளக்ஸ்: (2 தியேட்டர்கள் - உட்லண்ட்ஸ், உட்லண்ட் சிம்பொனி) - ராயப்பேட்டை. தொ.பே. 8523150.

ஈகா : (2 தியேட்டர்கள் - ஈகா, அனுஈகா) - சேத்துப்பட்டு. தொ.பே. 6411666.

ஜெயப்பிரதா : (2 தியேட்டர்கள் - ஜெயப்பிரதா, ராஜ்)- ராயப்பேட்டை. தொ.பே. 8533153.

சாந்தி தியேட்டர் - அண்ணா சாலை. தொ.பே. 8549086.

மெலோடி தியேட்டர் - ராயப்பேட்டை. தொ.பே. 8531371.

பைலட் தியேட்டர் - ராயப்பேட்டை. தொ.பே. 8268934.

காசி தியேட்டர் - ஈக்காட்டுத்தாங்கல். தொ.பே. 4821969.

மோட்சம் தியேட்டர் - புரசைவாக்கம். தொ.பே. 6423520.

பிரார்த்தனா டிரைவ்-இன் தியேட்டர் - ஈஞ்சம்பாக்கம். தொ.பே. 4850385.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X