கோயம்புத்தூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவை எதிர்ப்பதில் மதுரையை மிஞ்சியது கோவை- எச்சரிக்கை விடுத்து போஸ்டர்

Google Oneindia Tamil News

கோவை: கொரோனாவை முன்வைத்து தமிழகத்தில் விரைவில் போஸ்டர் யுத்தம் நடந்தாலும் ஆச்சரியமில்லைதான். கொரோனாவை மிரட்டும் மதுரை போஸ்டரை விஞ்சும் வகையில் கோவையிலும் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.

போஸ்டர்களில் விதம் விதமான வாசகங்களை எழுதி மெர்சலாக்குவது மதுரை மண்ணுக்கே உரித்தான கலை. நினைத்துகூட பார்க்க முடியாத நச் வாசகங்கள்தான் மதுரை போஸ்டர்களின் மாஸ் பரபரப்புக்கு காரணம்..

Flex Boards warn to Coronavirus in Coimbatore

அது அரசியல் ஆகட்டும்.. காது குத்து கல்யாணம். .. ஏன் கருமாதி போஸ்டரானாலும் அதில் ஒரு கலக்கு கலக்காமல் மதுரை மக்கள் ஓய்வதில்லை. சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் கொரோனாவை முன்வைத்து ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

அதில் குழந்தையாக கடவுள் முருகன் கையில் கொரோனா வைரஸை வைத்திருப்பது போலவும் இதனை முன்வைத்து திருவிளையாடல் பாணி உரையாடலையும் போஸ்டரில் இடம்பெற வைத்தனர். இதில் ஹைலைட்டே நம்ம வடிவேலுதான் நாரதராக சித்தரிக்கப்பட்டிருந்தார். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் அதகளமாகி இருந்தது.

ஏய் கொரோனா.. மக்களை டர்ர்ர் ஆக்குகிறாயா?.. ஏய் கொரோனா.. மக்களை டர்ர்ர் ஆக்குகிறாயா?.. "யாமிருக்க பயமேன்".. மதுரையை கலக்கும் மாஸ் போஸ்டர்!

இப்போது மதுரையின் இந்த போஸ்டரை மிஞ்சும் வகையில் கோவை பெருநகரத்தில் ஒரு பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை கொரோனாவுக்கு எச்சரிக்கை என்ற தலைப்பில்தான் இந்த பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அதில், ஏப்ரல் 14-ந் தேதிக்குள் இப்பூவுலகை விட்டு ஓடிவிடு... உனக்கு பயந்து எல்லாம் நாங்கள் கடையை அடைக்கவில்லை என நக்கலடித்தும் எச்சரித்தும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

    வாசப்படியில இப்படி செய்யுங்க.. நம்ம கைலதான் இருக்குங்க.. வைரலாகும் மஞ்ச தண்ணி! - வீடியோ

    குசும்புக்கு பேர் போன ஊர் கோவை அல்லவா!

    English summary
    Coimbatore Shop Keeper's flex boards had warned to Coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X