For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசி.. குமரி.. குற்றாலம்.. எல்லையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு.. தேர்தல் ஆணையம் சோதனை!

தென்காசி பகுதிகளிலுள்ள பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளை பார்வையிட இன்று நெல்லைமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் தென்காசி நகராட்

Google Oneindia Tamil News

தென்காசி: தென்காசி பகுதிகளிலுள்ள பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளை பார்வையிட இன்று நெல்லைமாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் தென்காசி நகராட்சி பொன்னம்பலம் தொடக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு தென்காசியில் தீவிர பரிசோதனைகள் நடந்து வருகிறது. தேர்தலுக்காக அதிகாரிகள் வேகமாக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தென்காசி பாராளுமன்றத்தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான குற்றாலம் பராசக்தி கல்லூரியில் சட்டமன்றத்தொகுதிவாரியாக வாக்குபெட்டிகளை வைக்கும் இடங்களையும்,வாக்குகளை எண்ணுமிடங்களையும் பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது... சொல்கிறார் ஓ.பி.எஸ் ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சர் ஆக முடியாது... சொல்கிறார் ஓ.பி.எஸ்

என்ன பேட்டி

என்ன பேட்டி

செய்தியாளர்களிடம் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் கூறும்போது:நெல்லை மாவட்டத்தில் நெல்லை, தென்காசி ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 515 வாக்குச்சாவடிகள் முழுமையாக பாதுகாப்பானவையாக கண்டறியப்பட்டுள்ளன. 3 வாக்குசாவடிகள் பதட்டமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளது. இவைகளில் மைக்ரோ அபசர்வர்கள் இருப்பார்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.

துணை ராணுவம்

துணை ராணுவம்

கூடுதல் துணை ராணுவப்படையினர் பதட்டமான வாக்கு சாவடிகளில் பணியில் இருப்பார்கள், இதில் தென்காசி தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியும் அடங்கும். இந்த தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குப்பதிவு முடிந்த உடன் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படும், வாக்கு எண்ணிக்கை அனைத்தும் குற்றாலம் பராசக்தி கல்லூரியில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

நெல்லை கண்காணிப்பு

நெல்லை கண்காணிப்பு

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கூறும்போது ;நக்ஸல்களை குறித்து தகவல்களை கேரளமாநில காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.அவர்களது நடமாட்டத்தை கண்காணிக்க மாதம் ஒருமுறை வனப்பாகுதிகளில் தேடுதல் வேட்டைக்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் குறித்து தீவிரமான கண்காணிப்பு நடந்து வருகின்றது.

காவல்

காவல்

இது குறித்து கொல்லம் மாவட்ட காவல்துறை தனியாக விபரங்களை சேகரித்து வருகின்றது.இது மட்டுமின்றி என்.எஸ்.டி.என்ற பிரிவு தனியாக கண்காணித்து தனியாக அந்தந்த பிரிவில் இரு மாநில எல்லையோர மாவட்ட காவல்துறையினரிடம் தொடர்பில் உள்ளனர் என்றார்.

கேரளாவில்

கேரளாவில்

அண்டை மாநிலமான கேரளாவிலும் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் கேரளாவிலும் உள்ள எல்லையோர மாவட்டங்களில் தேர்தலை சிறப்பாக நடத்துவது தொடர்பாக இரு மாநில அதிகாரிகளும் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் குற்றாலத்திலுள்ள கேரளா அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது.

யார் எல்லாம்

யார் எல்லாம்

இந்த கூட்டத்தில் கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் நியூக்,பத்தினம்திட்டா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயதேவ் , நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் உள்ளிட்ட இருமாநில காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் ஏன்

கூட்டம் ஏன்

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா ரமேஷ் இது குறித்து கூறும்போது:இரண்டுமாநில எல்லையோர மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.இதில் முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் நடப்பதால் இங்குள்ள வாக்காளர்களோ. அங்குள்ள வாக்காளர்களோ இங்குவந்தோ அங்கே போயோ வாக்களித்து விடக்கூடாது என்பதனை கண்காணிக்கவும்,தவறான சேய்களை தேர்தல் நேரத்தில் செய்துவிடக்கூடாது என்பதற்காக இந்த கூட்டம் போடப்பட்டுள்ளது.

English summary
Election Commission in full swing protection and preparation for the election in Tenkasi and border areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X