For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி யாருடைய இச்சைக்காக பெண்களை அழைத்தார்.. முத்தரசன் பளார் கேள்வி

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் என்ன நடக்கிறது. அவருக்கு ஜாமீன் மறுக்கபடுவது ஏன். அவர் யாருடைய இச்சைக்காக பெண்களை அழைத்தார். அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுக்குத் அந்த பலம் படைத்த மனிதர் யார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.

நெல்லையில் செய்தியாளர்களை முத்தரசன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது..

mutharasan questions tn govt on nirmaladevi issue

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்யும் கட்சிகள் செயல் போலியானது. 15 லட்சம் தருவோம் என்று சொன்னவர்கள் இன்று ஏமாற்றிவிட்டு அப்படி வாக்குறுதி அளிக்கவில்லை என்று ஏமாற்றுகின்றார்கள். குறிப்பாக நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் பிஜேபி ஆட்சி கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

அமைப்பு ரீதியாக அரசியல் ரீதியாக பலம் பொருந்திய கட்சிகள் ஒரணியில் இணைந்துள்ளோம். அவர்களிடம் அந்த பலம் இல்லை. பொங்கலுக்கு கொடுத்த இரண்டாயிரம் ரூபாய் பாராளுமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது மோடி , பழனிச்சாமி எதிர்பார்ப்பு . ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தாது.

பிஜேபி அதிமுக இரண்டும் பணம் கொடுக்க பல்வேறு வழிகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக மோடி சட்டப்பூர்வமாக பணம் பரிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.மிக மிக நவீனமான தெனாலிராமன் மோடி.

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் என்ன நடக்கிறது அவருக்கு ஜாமீன் மறுக்கபடுவது ஏன். அவர் யாருடைய இச்சைக்காக பெண்களை அழைத்தார். அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் தடுக்குத் அந்த பலம் படைத்த மனிதர் யார்? என்றார் முத்தரசன்.

English summary
CPI state secretary Mutharasan has posed questions to TN Govt on Nirmala Devi issue
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X