
‛பாட்டில் சரக்கு’ அடித்து பாபநாசத்துக்கு பயணம்... அரசு பஸ் டிரைவரை போலீசில் ஒப்படைத்த பயணிகள்
திருநெல்வேலி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்துக்கு அரசு பஸ்சை குடிபோதையில் இருந்த டிரைவர் ஒருவர் பயணிகளுடன் ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து டிரைவரை பிடித்து பயணிகள் போலீசில் ஒப்படைத்தனர்.
மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் அடிக்கடி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இருப்பினும் கூட ஆங்காங்கே சிலர் குடிபோதையில் வாகனம் ஓட்டுகின்றனர்.

இவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிப்பதுடன், விபத்து ஏற்படுத்துபவரை கைதும் செய்கின்றனர். இந்நிலையில் தான் குடிபோதையில் டிரைவர் அரசு பஸ்சை ஓட்டிய சம்பவம் நடந்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் சிங் (வயது 52). இவர் அரசு பஸ் டிரைவாக உள்ளார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேி மாவட்டம் பாபநாசத்துக்கு அரசு பஸ் ஓட்டி சென்றார். அவரால் பஸ்சை சரியாக இயக்க முடியவில்லை. பஸ் இயக்குவதில் இருந்து தடுமாற்றம் அடைந்து வந்தார்.

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு ராபர்ட் சிங் உடல்நலம் குறைபாடு என்பதை அறிய பயணிகள் அவரிடம் பேசினார். அப்போது அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது. இதனால் கோபமடைந்த பயணிகள் உடனடியாக பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பணகுடியில் பஸ்சை நிறுத்திய பயணிகள் டிரைவர் ராபர்ட் சிங்கை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணையை துவங்கினர். மேலும் அவர் மது அருந்தி உள்ளாரா? என போலீசார் சோதனை செய்தனர். அப்போது ்வர் மதுபானம் அருந்தி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து செய்ததில் மது அருந்தியது தெரியவந்தது. மதுபோதையில் அரசு பேருந்தை ஓட்டுனர் இயக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.