கொடைக்கானல் போயிட்டு கீழே வரும் போது வண்டியை ரைட் எடுங்க.. பார்க்க தவறிய அற்புதமான இடங்கள்
தேனி: தேனிக்கு சுற்றுலா போனால் பெரியகுளத்தில் ரூமை போடுங்கள். செலவும் மிக குறைவு.. வெறும் 500ரூபாய் கூட அறைவாடகை ஒரு நாளைக்கு வராது. அங்கு சென்று தங்கி இந்த இடங்களை எல்லாம் போய் ரசித்து பாருங்கள்.. அப்போது தான் தேனியில் தவறவிட்ட சந்தோஷம் என்னவென்று உங்களுக்கு புரியும்.
தேனி மாவட்டம் எல்லா பக்கமும் மலைகளால் சூழப்பட்ட மாவட்டம், வத்தலக்குண்டு வழியாக மட்டுமே தரைப்பகுதி வழியாக அடைய முடியும். தேனி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாதளங்கள் இருக்கின்றன என்றாலும், அதில் பலரும் தவறவிட்ட முக்கியமான சுற்றுலா அனுபவங்களை இப்போது பார்ப்போம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மாம்பழத்திற்கு பேமஸ் ஆன பகுதி. நாமக்கலுக்கு அடுத்தபடியாக கனரக வாகனங்கள் அதிகம் இருந்த நகரம்.. தேனியின் அசுர வளர்ச்சியால் அப்பபடியே சிறிய நகரமான முடங்கிப்போனது. பெரிய குளம் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் ஆகும். இங்கு ஏராளமான சுற்றுலா தங்கள் சுற்றிலும் உள்ளது. கொடைக்கானல் போகிறவர்கள் இங்கு வந்து ஒரு ரவுண்டு அடிச்சிட்டு போனால் அற்புதமான அனுபவமாக இருக்கும்.
தேனியை ஒப்பிடும் போது, பெரியகுளத்தில் சிறிய ஓட்டல்கள் தான் இருக்கும். அதேநேரம் தேனியைவிட ஓட்டல்களில் அறை வாடகை மிகவும் குறைவாகவே இருக்கும். சாப்பாடு மிக அருமையாக இருக்கும். குறிப்பாக பெரியகுளத்தில் சிற்றுண்டி கடைகள் ஏக பிரபலம். இங்கு வடை, டீ, நொறுக்குத்தீனிகள் மிக அருமையாக இருக்கும். இதை வேண்டும் அளவிற்கு வாங்கி கொண்டு நீங்கள் பெரியகுளத்தில் காலையில் நேரடியாக சோத்துப்பாறை போகலாம். அங்கு போகும் வழி எல்லாம் இயற்கை அன்னை உங்களுக்கு கொடுக்கும் வரவேற்பு உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும். சுற்றிலும் மாமரம், நடுவில் ஓடும் ஆறுகள் உங்களை குளிக்க சொல்லி கட்டாயம் வற்புறுத்தும்.
எனவே சோத்துப்பாறை சென்று குளித்துவிட்டு (அணையில் குளிக்க முடியாது, குளிக்கவும் கூடாது) , அப்படியே நேரடியாக அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கல்லாறு போகலாம். அது இயற்கையான நீச்சல் குளத்தில் குளிக்கும் அனுபவத்தை தரும். எச்சரிக்கையாக குளிக்க வேண்டும். இது கொஞ்சம் ஆபத்தான பகுதி. அதேநேரம் அற்புதமான அனுபவமாக இருக்கும், சோத்துப்பாறையில் இருந்து கல்லாறு போகும் பகுதி முழுமையாக இயற்கை அழகு உங்களை மதிமயக்கிவிடும். கல்லாறில் இருந்து நேரடியாக கொடைக்கானல் அழகை ரசிக்க முடியும். கல்லாற்றில் குளித்துவிட்டு, மீண்டும் அப்படியே சில கிலோ மீட்டர் பெரியகுளம் வந்து அங்கு மதியம் குறைந்த விலையில் அசைவ உணவுகளை ருசிக்கலாம். எல்லா வகையான உணவும் மிக குறைந்த விலையில் கிடைக்கும்.
பின்னர் சிறிது ஓய்வுக்கு பின்னர், நேரடியாக கும்பக்கரை போக வேண்டும். கும்பக்கரை அற்புதமான அருவி அதே நேரம் அருவிக்கு செல்லும் பாதை எவ்வளவு அழகானது என்பது பற்றி வைரமுத்து பாட்டே எழுதி இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கும்பக்கரை அருவியில் குளித்துவிட்டு அங்கிருந்து அடுக்கம் கிராமத்திற்கு பயணிக்கலாம். அங்கு கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகையும், வியூ பாய்ண்டுகளையும் முழுவதையும் பார்த்துவிட்டு மாலைக்குள் பெரியகுளம் திரும்பிவிட வேண்டும்.
ஏனெனில் கும்பக்கரை கொடைக்கானல் சாலையில் மாலை 5 மணிக்கு மேல் பயணிப்பது ஆபத்தானது. காட்டு மாடுகள் இறங்க ஆரம்பித்துவிடும். முற்றிலும் இயற்கை நிறைந்த,வாகன போக்குவரத்து முற்றிலும் இல்லாத அழகான இடங்களை ரசிக்க விரும்புவோர், முற்றிலும் இயற்கையை நேசிப்போர் கொடைக்கானல் போகும் போது, பெரியகுளம் போய் தங்கி ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள்.. கண்டிப்பாக சென்னைக்கோ பெங்களூருக்கோ உங்களுக்கு திரும்பி வரவே தோன்றாது. இன்னும் இயற்கை அப்படியே உள்ள பகுதிகளில் முக்கியமான இடங்களை நீங்கள் ஆனந்தமாக ரசிக்க முடியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications