For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Vaigai Dam Water Level Today | வைகை அணை நீர்மட்டம் இன்று

Google Oneindia Tamil News

Newest First Oldest First
11:09 AM, 10 Apr

தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உள்ளது. 19-ந்தேதி மாலை 6 மணி முதல் 23-ந்தேதி காலை 6 மணி வரை மொத்தமாக 26 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
9:44 AM, 21 Mar

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக முறைப்பாசன அடிப்படையில் 5 நாட்கள் அணையில் இருந்து நீர் திறந்தும், 5 நாட்கள் நிறுத்தியும் வருகின்றனர். மார்ச் 12ல் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் மார்ச் 17 காலை 6:00 மணிக்கு நிறுத்தப்பட்டது. மார்ச் 17 நிலவரப்படி, வைகை அணை நீர்மட்டம் 64.50 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 417 கன அடியாகவும் இருந்தது.
10:31 AM, 16 Jul

நேற்று முன் தினம் நிலவரப்படி, 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 56.20 அடியாக உள்ளது. வரத்து 1579 கனஅடி, திறப்பு 969 கனஅடி, இருப்பு 2915 மி.கனஅடியாக உள்ளது.
10:18 AM, 2 Jun

நேற்று முன்தினம் 116.59 இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மேலும் சரிந்து 116.12 அடியானது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் ஒரு அடி சரிந்துள்ளது குறிப்பிட தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் சரியும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
10:13 AM, 2 Jun

71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 62.57 அடியாக உள்ளது. . போதிய நீர் இருப்பு உள்ளதால் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியாறு பிரதான கால்வாய் பாசன நிலங்களுக்கு இன்று (ஜூன் 2 ஆம் தேதி) காலை 10 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
10:45 AM, 20 May

வைகை அணையில் நேற்றைய நிலவரப்படி நீர்மட்டம் 67.18 அடியாக உள்ளது. அணை உயரம் 71 அடி. அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தும் ஆற்றின் வழியாக நீர் திறப்பு இல்லாததால் வைகை ஆறு வறண்டுள்ளது.
12:31 PM, 19 May

வைகை அணையில் தற்போது நீர்மட்டம் 67.18 அடியாக உள்ளது. அணை உயரம் 71 அடி. அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்தும் ஆற்றின் வழியாக நீர் திறப்பு இல்லாததால் வைகை ஆறு வறண்டுள்ளது.
11:45 AM, 30 Nov

சில மாதங்களாக வைகை அணை நீர் மட்டம் 66 அடிக்கும் அதிகமாக உள்ளது. தற்போது அணை நீர் மட்டம் 69.72 அடியாக உள்ளது.
10:47 AM, 22 Nov

நேற்றைய நிலவரப்படி , வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. அணைக்கு 2700 கனஅடி நீர் வருகிறது. 2355 கன அடி நீர் திறக்கப்படுவதால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
9:44 AM, 18 Nov

தொடா் நீா் வரத்தால் வைகை அணை நீா்மட்டம் தற்போது 69.32 அடியாக உயா்ந்துள்ளது. இதனால் அணையிலிருந்து மீண்டும் வைகை ஆற்றில் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 2,354 கன அடியாகவும் அணையில் தண்ணீா் இருப்பு 5,656 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.
12:12 PM, 17 Nov

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு உயர்வால், நேற்றைய நிலவரப்படி வைகை அணைக்கு நீர்வரத்து 2,354 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் வெளியேற்றப்படுவதால் வைகை அணையில் நீர் இருப்பு 5,656 மி.கன அடியாக அதிகரித்துள்ளது.
10:12 AM, 11 Nov

நேற்றைய நிலவரப்படி, வைகை அணை நீர்மட்டம் 69.29 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணைக்கு வரும் உபரிநீர் வைகை ஆறு மற்றும் பாசனக் கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருவதால், அணையிலிருந்து வெளியேற்றும் உபரிநீரின் அளவு புதன்கிழமை காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,569 அடியாக உயர்த்தப்பட்டது. தற்போது அணைக்கு வினாடிக்கு 3,457 கன அடி வீதம் தண்ணீர் வரத்து இருந்து வருகிறது.
12:50 PM, 10 Nov

வைகை அணை நீர்மட்டம் செவ்வாய்கிழமை இரவு 69 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 71 அடி). இதையடுத்து, வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 2,569 கன அடி விகிதம் வரும் உபரிநீர், அணையிலிருந்து வைகை ஆறு மற்றும் பாசனக் கால்வாயில் வெளியேற்றப்பட்டது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்து வருவதால், அணையிலிருந்து வெளியேற்றும் உபரிநீரின் அளவு புதன்கிழமை காலை 8 மணிக்கு வினாடிக்கு 3,569 அடியாக உயர்த்தப்பட்டது. தற்போது அணைக்கு வினாடிக்கு 3,457 கன அடி வீதம் தண்ணீர் வரத்து இருந்து வருகிறது.
9:56 AM, 9 Nov

வைகை அணை நீர்மட்டம் 68 அடியை நெருங்கியதால், 58-ம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
10:22 AM, 8 Nov

கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 66 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 4,168 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டும்போது, முதற்கட்டமாகவும், 68.50 அடியை எட்டும்போது 2ம் கட்டமாகவும், 69 அடியை எட்டும்போது 3ம் கட்டமாகவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.
5:00 PM, 2 Nov

வைகை அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் நிலவரப்படி 62 அடியை எட்டியுள்ளது. மேலும் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் இன்னும் உயர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10:12 AM, 29 Oct

நேற்று முன் தினம் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 59.94 அடியாக உள்ளது. வரத்து 1907 கன அடி. நேற்று வரை 569 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் 769 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 3590 மி. கன அடியாக உள்ளது.
10:12 AM, 25 Oct

நேற்று முன்தினம் நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 57.35 அடியாக உள்ளது. வரத்து 2220 கனஅடி, நேற்றுவரை 1119 கனஅடி மட்டுமே திறக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை முதல் 1319 கனஅடியாக அதிகரிககப்பட்டுள்ளது. நீர்இருப்பு 3115 மி.கனஅடியாக உள்ளது.
9:46 AM, 18 Oct

வைகை அணையின் நீர்மட்டம் 55.68 அடியாக உள்ளது. 1265 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1119 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
12:49 PM, 16 Oct

இன்று காலை நிலவரப்படி, வைகை அணை நீர்மட்டம், 55.61 அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 907 கன அடியாக உள்ள நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1119 கன அடியாக உள்ளது.
9:17 AM, 26 Jul

வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1104 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம்68.55 அடியாக உள்ளது. வினாடிக்கு 769 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
11:42 AM, 23 Jul

(ஜூலை 22) காலை நிலவரப்படி வைகை அணையின் நீர் மட்டம் 68.44 அடியாக உள்ளது. வரத்து 1,011 கன அடியாகவும், நீர் திறப்பு 769 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5,430 மில்லியன் கன அடியாக உள்ளது.
11:08 AM, 17 Jun

வைகை அணை நீர்மட்டம் 66.25 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்இருப்பு 4908 மில்லியன் கனஅடியாகும். நீர்வரத்து 563 கனஅடியாகவும், நீர்திறப்பு 969 கன அடியாகவும் இருந்தது.
9:47 AM, 14 Jun

நேற்றைய நிலவரப்படி, வைகை அணையின் நீர்மட்டம் 67.8 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 390 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, வினாடிக்கு 969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
10:05 AM, 10 Dec

நேற்று புதன்கிழமை காலை 6 மணியளவில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 58.97 அடியாக உயர்ந்துள்ளது.
10:10 AM, 3 Dec

வைகை அணை நீர்மட்டம் 58.66 அடியாக இருந்தது(மொத்த உயரம் 71 அடி). நீர்வரத்து வினாடிக்கு 1403 கன அடியாகவும் இருந்தது. குடிநீருக்காக வழக்கம்போல் வினாடிக்கு 69 கனஅடி நீர் வெளியேறுகிறது.
9:59 AM, 2 Dec

தொடர் மழை எதிரொலியாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 61 அடியாக உயர்ந்துள்ளது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறக் கப்பட்டு வருகிறது.
9:55 AM, 18 Nov

வைகை அணைக்கு நேற்று நீர்வரத்து1087 கன அடியாக அதிகரித்தது. 2,019 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் மட்டம் 49.70 அடியாக உள்ளது.
10:06 AM, 17 Nov

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியது. மழையும் நின்றதால் அணையின் நீர்மட்டம் 48 அடி வரை குறைந்தது. தற்பொழுது மழைப்பொழிவால் பாசனத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் 69 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணைக்கு 965 கன அடி நீர் வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 49.80 அடியாக உள்ளது. விரைவாக 50 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11:40 AM, 12 Nov

நேற்று புதன்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 47.54 அடியாக இருந்தது. அணைக்கான நீா்வரத்து 970 கன அடியாகவும், அணையிலிருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், சேடபட்டி கூட்டுக் குடிநீா் திட்டங்களுக்கு 69 கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. அணையின் மொத்த நீா் இருப்பு 1,686 மில்லியன் கனஅடியாக இருந்தது.

Vaigai Dam Water Level Today

வைகை அணை வரலாறு:

1957 ஆம் ஆண்டு காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது, மக்களை சந்திக்க தேனிக்கு சென்று இருந்தார். அப்பொழுது எம்.எல்.ஏ என்.ஆர் தியாகராஜன் முதல்வர் காமராஜரிடம் , ஆண்டிபட்டி கால்வாய் வழியே வரும் ரயிலின் சரக்குகளை சிலர் கொள்ளையடித்து விடுகின்றனர் என்றும், இதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்றும் கேட்டுள்ளார். இதனை கேட்ட காமராஜர், சிறிது நேரம் யோசித்து விட்டு , கலெக்டரை கூப்பிட்டு இப்பகுதியில் ஓடும் முல்லைப்பெரியாறு மற்றும் வைகையை இணைத்து ஒரு அணை கட்ட வேண்டும். அதற்கான சர்வேயை உடனே எடுத்து எனக்கு அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட எம்.எல்.ஏ என்.ஆர் தியாகராஜன் மனதிலோ, என்னடா இது, திருட்டுக்கு வலி சொல்ல சொன்னால், இவர் அணை கட்ட சொல்கிறாரே என்று குழப்பம் வந்தது.

தன் குழப்பத்தை தீர்க்க, காமராஜர் அய்யாவிடமே போய், திருட்டுக்கு முடிவு கட்ட எப்படி அணை கட்டுவது சரியாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு காமராஜர் , திருட்டு ஏன் நடக்கிறது என்றால் கொள்ளையடிப்பவர்களுக்கு வேலையும் இல்லை, கையில் பணமும் இல்லை. ஆனால் இந்த அணையை கட்டினால் விவசாயம் வளரும், அவர்களுக்கு வேலையும் , பணமும் கிடைக்கும் , அதற்காக தான் அணை கட்ட சொன்னேன் என்றார் காமராஜர். அந்த மாதமே, கலெக்டர் கொடுத்த சர்வே ரிப்போர்ட் வர, அதில் இந்த அணை கட்டினால் குன்னூர் என்ற கிராமமே நீரில் மூழ்கும் அபாய சூழல் உருவாகும் என்று ஆய்வு அறிக்கையில் சொல்லபட்டு இருந்தது.

இதனால் காமராஜர், குன்னூர் கிராம மக்களின் நலனை கருதி அவர்களுக்கு மாற்று இடமும், தக்க நஷ்ட ஈடும் வழங்க உத்தரவு பிறப்பித்தார். பின்பு வைகை அணை கட்ட பணிகள் துவங்கி, 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 1959 ஆம் ஆண்டில் ஜனவரி 29 ஆம் நாள் காமராஜர் அவர்களால் வைகை அணை திறந்து வைக்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் துவங்கப்பட்ட வைகை அணை இன்று வரை லட்சக்கணக்கான ஏக்கர் பாசன வசதிக்கும், 3 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

எங்கு உள்ளது வைகை அணை?

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து 7கி.மீ தொலைவில் உள்ள நரசிங்கபுரத்தில் வைகை அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் மூலம் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு விவசாயத்துக்குத் தேவையான நீரையும், மதுரை மற்றும் ஆண்டிப்பட்டி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.

எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது வைகை அணை?

வைகை அணை (Vaigai Dam) என்பது தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆண்டிப்பட்டிக்கு அருகே பாயும் வைகை ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். நிலக்கோட்டை அருகில் உள்ள பேரணை, மதுரை விரகனூர் மதகு அணை, பார்த்திபனூர் அணைக்கட்டு போன்றவை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள குறிப்பிடத்தகுந்த பிற அணைகளாகும்.

வைகை அணை முழு கொள்ளளவு விவரம்:

வைகை அணையின் ஆழம் என்பது 21.64மீ (71அடி). இந்த வைகை அணையின் மொத்த கொள்ளளவு 6091 மில்லியன் கன மீட்டர் (172 மில்லியன் கன அடி). வைகை அணை 111அடி உயரம் உடையது. இந்த அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் 71அடி நீரைத் தேக்கி சேமித்து வைக்க முடியும்.

வைகை அணை வானிலை:

ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த வைகை அணை அமைந்துள்ளதால் இங்கு இதமான குளிர் காற்று எப்போதும் வீசும். சில சமயங்களில் குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் கூட குளிர்ச்சியான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் வருகை எப்பொழுதும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் .

வைகை அணை பூங்கா:

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்கு ஏற்ப வைகை அணையின் இருபுறமும் கண்கவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்களுக்குச் செல்ல வேண்டுமெனில் சுற்றுலா பயணிகள் வைகை அணையின் முன்புறமுள்ள சிறிய பாலத்தின் வழியே கடந்து வர வேண்டும். இந்தப் பூங்காவில் சின்னச்சிறு குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டுத் திடல்களும் இதர பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

மேலும் இங்கு உள்ள ஒரு பூங்காவில் செயற்கை அமைப்பில் தண்ணீர் ஆறு போல் மேலிருந்து கீழ் வரை வரும்படி செய்யப்பட்டுள்ளது। இந்த தண்ணீரானது ஒரு சில தூரம் வரை சென்று கடைசியில் சிறிய அணை போன்ற அமைப்பின் வழியாக வெளிவந்து, இறுதியில் அந்த தண்ணீர் ஒரு அரக்கன் வாயின் வழியே வெளியேறும்படி செய்யப்பட்டுள்ளது।

செயற்கை வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் முக்கிய விடுமுறை நாட்களில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பார்க்க முடியும்.

வைகை அணை - மிருகக் காட்சி சாலை:

வைகை அணை பூங்காவை அடுத்து ஒரு மிருகக்காட்சி சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிருகக்காட்சி சாலையைப் பார்வையிட தனிநபர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கின்ற காரணத்தால் இங்கு ஒரு சில பறவைகளும், விலங்கினங்களும் தான் உள்ளன. முயல், எலி, மான், ஒரு சில பறவைகள் என்று வெளியில் திரியும் உயிரினங்களே இங்கு காணப்படுகின்றன.
நீர்மின் உற்பத்தி நிலையம்:

வைகை நீர்மின் உற்பத்தி திட்டமும் இந்த அணையில் இயங்கி வருகிறது. மேலும் அணைக்கருகிலேயே தமிழ்நாடு விவசாய ஆராய்ச்சி மையமும் அமைந்துள்ளது. இந்த மையமானது நெல், பருத்தி, உளுந்து மற்றும் கொள்ளு போன்ற தானியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது.

வைகை அணை - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்:

தேக்கடி, சுருளி அருவி, கொடைக்கானல், மதுரை, திண்டுக்கல், மேகமலை, கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை அணை, குரங்கணி ஆகிய சுற்றுலா தளங்கள் வைகை அணைக்கு அருகே அமைத்துள்ளது.

வைகை அணை - பார்வையிடும் நேரம்:

வைகை அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனைத்து வார நாட்களிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

English summary
Vaigai Dam Water Level Today: Check complete details on Vaigai Dam Water Level, History, Weather, Visit Timings, Nearby Places to Visit and more interesting facts on Vaigai Dam. வைகை அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரம், முழு கொள்ளளவு, வரலாறு, வானிலை, என வைகை அணை தொடர்பான தகவல்களை இந்த பக்கத்தில் காணலாம்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X