• search
By : Oneindia Video Tamil Team
Published : December 27, 2016, 01:55
Duration : 01:28

கத்தியால் தொண்டையில் குத்திய 10ம் வகுப்பு மாணவர்.. தேனியில் பரபரப்பு: வீடியோ

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 10ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மாணவருக்கு கத்திக் குத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்க சமுத்திரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களின் நலனுக்காக பள்ளி வளாகத்திலேயே அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதி திராவிடர் மாணவர் விடுதி செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில், விடுதியில் தங்கிப் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவரான விஜயமணிக்கும் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற மாணவருக்கும் இடையே உரக்கப் படிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில், மாணவர் பிரவீன் குமார், தான் மறைத்து வைத்திருந்த சிறிய ரக மடக்கு கத்தியை எடுத்து விஜயமணியின் தொண்டையில் குத்தினார். இதில் மாணவர் விஜயமணிக்கு காயம் ஏற்பட்டது.இதையடுத்து, ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற விஜயமணி, பின்னர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இதுகுறித்து, ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில், விஜயமணி கொடுத்த புகாரின் பேரில் ஆண்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகள், பிரவீன் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் ஆண்டிப்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more