By: Oneindia Tamil Video Team
Published : February 09, 2018, 10:36

கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 136 கோடி அபராதம்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

இந்திய சந்தையில் ஆன்லைன் தேடலில் பாரபட்சமாக செயல்பட்டதாகக் கூறி கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 136 கோடி அபராதம் விதித்து இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் தேடலில் பாரபட்சமாக நடந்து கொள்வதாக பிரபல திருமண சேவை இணையதளம் இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்தது.

இந்த புகாரை விசாரித்த ஆணையம் கூகுள் நிறுவனம் பாரபட்சமாக செயல்படுவதை உறுதி செய்தது. இதையடுத்து 190 பக்கங்கள் கொண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது இந்தியா போட்டி கண்காணிப்பு ஆணையம்.பாரபட்சமாக நடந்து கொண்ட கூகுள் நிறுவனத்துக்கு ரூ. 135.86 கோடி அபராதம் விதித்துள்ளது ஆணையம்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா