• search
By : Oneindia Video Tamil Team
Published : November 03, 2018, 03:05
Duration : 01:08

பன்றிக் காய்ச்சலினால் 625 பேர் உயிரிழப்பு-வீடியோ

இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சலினால் 625 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக டெங்கு காய்ச்சல் உள்ளதாகவும் கடலூரில் பன்றிக் காய்ச்சலினால் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதனை கூர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்தார் மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் தானாக மருந்து உட்கொள்ளாமல் அரசு மருத்துவமனை நாட வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் உள்ள 2700 மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு டெங்கு பாதிக்கப்பட்டு 40 முதல் 50 பேர் வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பன்றிக்காய்ச்சல் பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 30 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு 23 ஆயிரம் பேர் நோயால் பாதிக்கப்பட்டனர் ஆனால் தற்போது வரை 2700 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். பன்றிக்காய்ச்சல் சோதனை செய்ய 21 சோதனை மையங்கள் உள்ளதாகவும், 400 ரத்தவங்கி உள்ளதாகவும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 12 பேர் இறந்ததாகவும், பன்றிக் காய்ச்சலினால் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும் இந்தியா முழுவதும் பன்றிக் காய்ச்சலினால் 625 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
Follow Oneindia Tamil On
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா