• search
By : Oneindia Video Tamil Team
Published : January 26, 2017, 05:36
Duration : 02:11

68 ஆவது குடியரசு தினம்... களையிழந்த விழா... ஆர்வமில்லாத தமிழகம்!


சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 68ஆவது குடியரசு தினவிழா நடைபெற்றது. இத்தனை வருடங்களில் இல்லாதவகையில் இந்த வருடம் குடியரசு விழா தமிழகத்தில் களையிழந்து காணப்பட்டது.

தமிழகத்தில் அடுத்தடுத்து பல்வேறு பிரச்சனைகள் நடந்தேறி வருகின்றன. குறிப்பாக கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு அறிவிப்பு, வர்தா புயல், வறட்சி, விவசாயிகள் மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம், அதையொட்டி நடந்த கலவரங்கள் என பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக குடியரசு விழாவில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்துகொள்ளவில்லை.

தமிழகத் தலைநகர் சென்னையில் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கொடியேற்றினார். பின்பு கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு அணிவகுப்புகளும் நடைபெற்றது. ஆனால், விழாவில் பொதுமக்கள் அதிகம் கலந்துகொள்ளாத காரணத்தால் அப்பகுதியே களையிழந்து காணப்பட்டது.

தமிழகத்தின் அந்தந்த மாவட்டங்களில் மாவட்ட ஆட்சி தலைவர்கள் கொடியேற்றினர். பெரும்பாலான இடங்களில் அரசு அதிகாரிகளின் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். பொதுமக்கள் அதிகளவில் கலந்துகொள்ளாத காரணத்தால், இத்தனை வருடங்களில் இல்லாதவகையில் குடியரசு விழா களையிழந்து காணப்பட்டது.

புதுச்சேரி இந்திராகாந்தி மைதனத்தில் நடைபெற்ற குடியரசு விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கொடியேற்றினார். முதலமைச்சர் நாரயணசாமி மற்றும் சபாநாயகர் வைத்தியலிங்கம் மற்றும் சட்டமன்ற, பாரளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more