By: Oneindia Tamil Video Team
Published : January 26, 2018, 12:36

குடியரசு தினவிழா கொண்டாட்டம்- தமிழ்நாடு- வீடியோ

Subscribe to Oneindia Tamil

நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடியை ஏற்றினார்.


Loading ad
நாட்டின் 69வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மெரினா கடற்கரை முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அந்த பகுதியில் விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 69வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதேநேரம் குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டம் தீட்டி உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைதொடர்ந்து உள் துறை அமைச்சகம் சார்பில், அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குடியரசுத் தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மரியாதை செலுத்தினார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா