By : Oneindia Tamil Video Team
Published : April 05, 2018, 07:15

கட்டாயப்படுத்தி கலைக்கப்பட்ட கருவுடன் புகார் அளித்த சிறுமி

மத்திய பிரதேசத்தில் தலித் சிறுமி ஒருவர் தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டு கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததை அடுத்து அந்த கருவை பையில் கொண்டு வந்து காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

மத்திய பிரதேச மாநிலம் ,சாத்னா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை நீரஜ் பாண்டே மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சிறுமியை கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னரும் அந்த சிறுமியை விடாமல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போதிலும் அந்த புகாரின் பேரில் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.


A 16 years old Dalit Girl gives complaint in SP's office with her foetus in a bag

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா