• search
By : Oneindia Video Tamil Team
Published : December 14, 2017, 02:16
Duration : 01:34

‘தீரன்‘ பெரியபாண்டியின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி -வீடியோ

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி பல்வேறு காரணங்களால் மறக்க முடியாத போட்டியாகியுள்ளது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 392 ரன்களை குவித்து, மொகாலியில் அதிகப்படியான ரன்னை பதிவு செய்து அசத்தியது. 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி வாகை சூடியது.

இதில் கேப்டன் ரோகித் ஷர்மா இரட்டை சதம் விளாசி, சர்வதேச அரங்கில் 3 முறை இரட்டை சதங்களை கடந்து அசத்தல் சாதனை படைத்தார்.ரோகித்ஷர்மா டபுள் செஞ்சுரி அடித்ததை பார்த்துவிட்டு அவரது மனைவி ஆனந்த கண்ணீர் விட்ட படமும், வீடியோவும், சோஷியல் மீடியா முழுக்க நேற்று வைரலானது. அதேபோல செஞ்சுரி, டபுள் செஞ்சுரி அடித்த ரோகித் ஷர்மா மனைவியை பார்த்து பிளையிங் கிஸ் கொடுத்ததும், பின்னர் பெவிலியன் திரும்பி மனைவிக்கு நெற்றியில் முத்தமிட்டு இந்த இரட்டை சதத்தை திருமண நாள் பரிசாக அறிவித்ததும் அதிகமாக செய்திகளில் இடம் பிடித்தது.

போட்டிக்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவுடன் 100 மீட்டர் தூரம் டோணி ஓட்டப்பந்தையம் நடத்தி வெற்றி கண்ட வீடியோவும் வைரலாக சுற்றியது. ஆனால் மற்றொரு பாசமிகு சம்பவமும் அதே மைதானத்தில் அரங்கேறியது.

ஆம்.. டோணியை பார்க்க உள்ளே ஓடி வந்த ரசிகர் ஒருவர் அவரின் கால்களை தொட்டு வணங்கினார். இருப்பினும் அதை டோணி தடுத்தார். ஓடி வந்த பாதுகாப்பு வீரர்கள் அந்த ரசிகரை அழைத்துச் சென்றனர். போகும்போதும் அந்த ரசிகர், திரும்பி திரும்பி டோணியையே அன்பு, உருக்கம் போன்ற பாவனைகளோடு திரும்பி, திரும்பி பார்த்து சென்றார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more