By: Oneindia Tamil Video Team
Published : January 04, 2018, 01:18

ஆகாயத்தில் அடித்துக்கொண்டு ஜெட் ஏர்வேஸ் விமானிகள்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

நடுவானில் பறந்துகொண்டிருந்த போது சண்டை போட்டுக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. கடந்த திங்கள்கிழமை லண்டனில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று 324 பயணிகளுடன் மும்பை வந்தது. அப்போது விமானத்தை மூத்த விமானி ஒருவர் இயக்கினார். அவருடன் பெண் விமானியும் இருந்தார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாய்த்தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. இந்த தகராறில் பெண் விமானியை அந்த மூத்த விமானி அறைந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து விமான ஓட்டி அறையில் இருந்து உடனடியாக அப்பெண் கண்ணீருடன் வெளியேறினார். பின்னர் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு மீண்டும் விமானி அறைக்கு சென்றுள்ளார்.
அதற்கு அடுத்த சில மணிநேரத்தில் விமானம் மும்பை வந்தடைந்தது. அப்போது இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் விமானி ஜெட் ஏர்வேஸ் நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா