By: Oneindia Tamil Video Team
Published : January 23, 2018, 07:22

கடலூர் அருகே திடீரென்று பற்றியெறிந்த கார்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

ஆட்சியர் அலுவலகம் அருகே ஓடும் காரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் கோழிப்பாக்கத்தை சேர்ந்தவர் விஜி. இவர் சென்னை திருவான்மியூரில் தனது டாடா இன்டிகா காரை கால் டாக்ஸியாக ஒட்டி வருகிறார்
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சொந்த ஊரான கோழிப்பாக்கம் சென்றுவிட்டு ஓட்டுநருடன் சென்னைக்கு திரும்பினார். அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தபோது காரிலிருந்து திடீரென புகை வந்துள்ளது.

இதையடுத்து விஜி காரை விட்டு இறங்கி சாலையில் சென்று உதவி கேட்கும் முயற்சியில் முற்பட்டபோது காரில் மளமளவென தீப்பற்றியுள்ளது.

இது குறித்த உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக புதுநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த தீ விபத்து காரணமாக புகை மூட்டம் ஏற்பட்டு அந்தப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா