By: Oneindia Tamil Video Team
Published : November 23, 2017, 03:24

கடனில் மூழ்கும் தயாரிப்பாளர்கள்.. சினிமாவின் சாபக்கேடுகள்! வீடியோ

Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கமாக இருந்தபோது சினிமா தொழில் கண்ட வளர்ச்சி.. பெற்ற லாபம் இவையெல்லாம்... கோலிவுட் என அழைக்கப்பட்டதிலிருந்து தொய்வைச் சந்தித்து வருகிறது என்பதுதான் எதார்த்தம். இதற்கு முக்கியமாக சொல்லப்படுவது உச்சமாகியிருக்கும் நாயகர்கள், நாயகிகளின் சம்பளம். தயாரிப்பாளர் அசோக்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் அளித்த பேட்டி, சினிமாத்துறையின் எதார்த்தத்தை வெளிச்சம்போட்டு காட்டியது.
சினிமாத்துறையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் வெறும் 10 %பேர்தான், மீதமுள்ளவர்கள் தினசரி வாழ்க்கையுடன் போராடவேண்டியுள்ளது என்றார் பிரகாஷ் ராஜ். அதேபோல், தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைச் சந்திக்க, சில உச்ச நட்சத்திரங்களின் சம்பளமே காரணம் என்று வெளிப்படையாக பேசிய அவர், மாற்றத்தை நம் வீட்டிலிருந்து துவங்குவோம் என்று சொன்னார். அரசு சினிமாத்துறையை சீர்படுத்தவேண்டும் என்று பிரகாஷ்ராஜ் பேட்டியளித்தார்.
ஹுரோ, ஹுரோயின்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம், ஆடம்பர ஷூட்டிங் என்று காலம் காலமாக பல சாபக்கேடுகளைக் கடந்து தான் தயாரிப்பு நிறுவனங்கள் படத்தை வெளியிட்டு வருகின்றன.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா