By : Oneindia Video Tamil Team
Published : October 17, 2018, 04:46
Duration : 04:02
04:02
சாமானியப் பெண்களும் வாய்திறக்க வேண்டும்- நடிகை ரோகிணி-வீடியோ
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நடிகை ரோகிணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``பெண்களுக்குப் பேசும் உரிமை உள்ளது என்பதன் ஒரு பகுதியாக Me too உருவாகியுள்ளது. கருத்துரிமையின் ஒரு பகுதியாகத்தான் மீ டூ-வைப் பார்க்கிறேன். சாமானியப் பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள், அத்துமீறல்கள் குறித்துப் பேச முன்வர வேண்டும். அவர்கள் முன்வருவார்கள் என நம்புகிறேன். மேலும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நிலையை வெளிப்படுத்தும் விதமாகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வரும் 19-ம் தேதி `கருத்துரிமை போற்றுதும்' என்ற தலைப்பில் ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது என கூறியுள்ளார்.