By: Oneindia Tamil Video Team
Published : January 20, 2018, 03:39

சசிகலாவை திட்டும் பொன்னையன்

Subscribe to Oneindia Tamil

ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டுகள் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அவரை தீர்த்து கட்டிவிட்டது சசிகலா குடும்பம் என்று பொன்னையன் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்று அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கையை வெளியிட்டது. அதில் ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும்போதே அரை மயக்கத்தில்தான் இருந்தார்.அவரது சர்க்கரை அளவு 500-க்கும் மேலும், ரத்த அழுத்தம் அதிகரித்தும் காணப்பட்டது. மேலும் அவரது உடலில் ஆக்சிஜன் அளவு 48 சதவீதமாக இருந்ததால் அவரால் மூச்சு விட முடியவில்லை என்று இருந்தது.ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தவரை காய்ச்சல், நீர் சத்து குறைபாடு என்று மட்டுமே கூறிவந்த அப்பல்லோ ஓராண்டு கழித்து ஒப்புக் கொண்டுள்ளது. அவரது மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா