• search
By : Oneindia Video Tamil Team
Published : January 29, 2017, 01:39
Duration : 05:22

மெரினாவில் நள்ளிரவு முதல் 144 தடை ஆணையின் தாக்கம்: வாக்கிங் மட்டுமே போன மக்கள் - வீடியோ

சென்னை:144 தடை எதிரொலியால் மெரினா கடற்கரை மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைவாக காணப்படுகிறது. மெரினாவில் 144 தடை ஆணை போடப்பட்டிருப்பது ஏற்க முடியாது என மக்கள் கருத்துது தெரிவித்துள்ளனர்.

மெரினா கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மெரினா கடற்கரைப் பகுதி மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது.

மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீண்டும் ஒன்று கூட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மெரினா கடற்கரையில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஆணை வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு காரணமாக மெரினா கடற்கரைப் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக நடைபயிற்சி செல்லும் மக்கள் மட்டுமே அங்கு வந்திருந்தனர். கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு மெரினா பகுதியில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Oneindia Tamil On

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more