By: Oneindia Tamil Video Team
Published : November 23, 2017, 11:06

தர்மயுத்தம் 2.0 : மைத்ரேயன் ஃபேஸ்புக் பதிவும்...அரசியல் அதிர்வுகளும்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

பிளவுபட்டிருந்த அதிமுக அமாவாசை நாளில் இணைந்தாலும் இணைந்தது....ஒவ்வொரு அமாவாசை வரும் போதும் யாராவது ஏழரை இழுத்து அதிர்வுகளை உருவாக்கிறார்கள். ஏதேது.. தர்மயுத்தம் 2.0 நடந்துரும் போலயே என்று பேச ஆரம்பித்து விட்டனர்.

துணைமுதல்வர் ஓபிஎஸ் பிரதமர் மோடியைப் பார்க்கப் போனால் முதல்வருடன் மோதல் அதான் பார்த்து பேசி பஞ்சாயத்து செய்யப் போயிருக்கிறார் என்று எதிர்கட்சியினர் பத்த வைக்கின்றனர்.
ரெய்டு ஒருபக்கம் சசிகலா குடும்பத்தை பதம் பார்க்க, டிடிவி தினகரனோ கோவில் கோவிலாக போய் பரிகாரம் செய்து வர, என்ன வேணா நடக்கட்டும் நாங்கள் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடுவோம் என்று கூறுகிறார்கள்

அணிகளை இணைத்துவிட்டு ஓபிஎஸ் துணை முதல்வராக வலம் வருகிறார். நம்மளை எல்லாம் யாரும் மதிக்கிறது இல்லையே என்பது பலரது மனக்குமுறலாக இருக்கிறது. அதை வெளிப்படையாகவே கொட்டி விட்டார் ஒபிஎஸ் அணியைச் சேர்ந்த மைத்ரேயன்.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா