By : Oneindia Tamil Video Team
Published : November 22, 2017, 07:05
02:32
தினமும் இந்த பழம் சாப்பிட்டா வயிற்றில் சேர்ந்திருக்கும் கொழுப்பு கரையும்!- வீடியோ
மருத்துவ குணம் நிரம்பியது என்று சொல்லி நாம் எடுத்துக் கொள்ளக்கூடிய அனைத்து வகையான உணவுகளும் அதிக விலைகொண்டதல்ல, அதை விட நாம் சாதரணமாக எடுத்துக் கொள்ளும் உணவுகள், எளிதாக நமக்கு கிடைக்ககூடிய உணவுகளில் ஏராளமன மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது.
உலகின் எல்லா பாகங்களிலும் எல்லா நேரங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் என்றால் அது வாழைப்பழம் தான். வாழைப்பழத்தில் மூன்று வகையான இனிப்புகள் இருக்கிறது. சக்ரோஸ், ப்ரக்டோஸ்,ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் கிடைத்திடும்.இதைத் தவிர நம் குடலுக்குத் தேவையான ஃபைபர் நிறைய இருக்கிறது.
வாழைப்பழம் மனிதனின் மூளைக்குத் தேவையான அனைத்து வகையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனை சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்ற நீண்ட பட்டியலை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.தீவிரமான விளையாட்டிற்கு பிறகோ அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுங்கள். அதில் அதிகப்படியான மக்னீசியம் இருக்கிறது. இதனைச் சாப்பிடுவதால் தசைகளில் தேக்கி வைத்திருக்கும் கொழுப்பு கரைந்திடும். இதிலிருக்கும் எலக்ட்ரோலைட் மற்றும் பொட்டாசியம் தசை இறுக்கத்தை
வாழைப்பழத்தில் விட்டமின் பி9 இருக்கிறது. அதோடு அகா ஃபோலேட் என்ற ஒரு வகை நியூட்ரிசியன் இருக்கிறது. இது குறைவாக இருப்பதால் தான் நமக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் மூளையில் செரோடோனின் என்ற ஹார்மோனைச் சுரக்கச் செய்திடும் இதனால் மன அழுத்தம் குறைந்து மகிழ்சியுடன் இருப்பீர்கள்.