• search
By : Oneindia Tamil Video Team
Published : August 02, 2018, 01:27

ஆகம விதிப்படி அச்சகர் ஆனேன் மாரிச்சாமி பேட்டி-வீடியோ

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கடந்த 2006-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதற்கிடையே பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியை 2008-ல் தமிழக அரசு நடத்தியது. இந்த பயிற்சியை 206 பேர் நிறைவு செய்தனர். இந்த நிலையில் ஆகம விதிகளை மீறினால் பணி நீக்கம் செய்யலாம் உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து அர்ச்சகர் பயிற்சி படித்த மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவரை மதுரை தல்லாகுளம் அய்யப்பன் கோவில் அர்ச்சகராக முதன் முறையாக தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ள நான் கடந்த 2007 முதல் 2009-ம் ஆண்டு வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆன்மீக பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிபெற்றேன். இந்த பயிற்சியில் 206 பேர் கலந்து கொண்டோம். பயிற்சியை முழுமையாக முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது பயிற்சி முடிந்ததும் மதுரை புதூரில் உள்ள காளியம்மன் கோவிலில் பணியாற்றினேன். இந்த நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை மதுரை தல்லாகுளத்தில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு அர்ச்சகர் தேவை என்று விளம்பரம் செய்தது. அந்த விளம்பரத்தைப் பார்த்து விண்ணப்பித்தேன்.
சிறிது நாளில் என்னை நேர்முகத்தேர்வுக்கு அழைத்தனர். தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து என்னை தல்லாகுளம் அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக நியமித்துள்ளனர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more