By: Oneindia Tamil Video Team
Published : November 21, 2017, 01:40

பத்மாவதி.. பார்ர்ரா.. பாஜகவுக்கு கண்டனமெல்லாம் தெரிவிக்கிறார் அர்னாப்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமி, 'பத்மாவதி' படத்திற்கு பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிப்பது எந்தவிதத்திலும் சரியானது அல்ல என்று தெரிவித்து இருக்கிறார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருந்து விலகி, ரிபப்ளிக் செய்தி தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநராகவும், விவாதங்களை தொகுத்து வழங்குபவராகவும் பணிபுரிந்து வருகிறார் அர்னாப். அந்த தொலைக்காட்சி பா.ஜ.க.,விற்கு ஆதரவான செய்திகளை வழங்கிவருகிறது.

சஞ்சய்லீலா பன்சாலியின் இயக்கத்தில், தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகி இருக்கும் பத்மாவதி திரைப்படத்தில் ராஜ்புத் வம்சத்தினரைப் பற்றி தவறான முறையில் படமாக்கப்பட்டுள்ளதால் அதை தடை செய்யக்கோரியும், படம் வெளியானால் தீபிகா, பன்சாலியை கொலை செய்வோம் என்றும் பல்வேறு அமைப்புகள் மிரட்டி வருகின்றன.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெரும் எதிர்ப்பை சந்தித்து வரும் இந்த படத்தை தடை செய்து மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத் மாநில முதல்வர்களே எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா