By : Oneindia Video Tamil Team
Published : January 13, 2018, 05:53
Duration : 01:26
01:26
சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய கோரிய சசிகலாவின் கோரிக்கை நிராகரிப்பு
ஜெயலலிதா மரண விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் முன்வைத்த கோரிக்கையை ஆறுமுகசாமி நிராகரித்தார். ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சுமார் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.
முன்னாள் தலைமை செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம் மோகன் ராவ் , அப்பல்லோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் என 20 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த சம்மன் இமெயிலில் அனுப்பப்பட்டது. சம்மனுக்கு பதில் அளிக்க வேண்டுமென்றால் தன் மீது புகார் கொடுத்தவர் யார் என்பதை தனக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்துள்ளது.