By : Oneindia Tamil Video Team
Published : January 09, 2018, 12:22

காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ். சதித்திட்டம் தவிடுபொடியாகிவிட்டது- வீடியோ

மகாத்மா காந்தி படுகொலைக்கு காரணமே 4-வது குண்டு என கதைவிட்ட ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் சதித்திட்டம் தகர்ந்து போனது என அகில பாரதிய இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா 'மகிழ்ச்சி' தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மும்பை பங்கஜ் பத்னிஸ் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதற்காக நியமிக்கப்பட்ட அமரேந்தர் சரண், கோட்சேதான் காந்தியை கொலை செய்தார், ஆகையால் மறுவிசாரணை தேவை இல்லை என உச்சநீதிமன்றத்தில் தெளிவாக தெரிவித்துவிட்டார். இதனை அகில பாரதிய இந்து மகாசபையின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அசோக் சர்மா தெரிவித்துள்ளதாவது:

மகாத்மா காந்தியை கொலை செய்தது எங்களது இந்து மகாசபைதான். ஆனால் இந்த பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் 4-வது குண்டுதான் காந்தி மரணத்துக்கு காரணம் என ஆர்.எஸ்.எஸ்., பாஜக சதித் திட்டம் தீட்டி வழக்கு தொடர்ந்தது,. ஆனால் இந்த முயற்சி இப்போது தவிடு பொடியானது,

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா