By: Oneindia Tamil Video Team
Published : November 30, 2017, 12:57

அடுத்த ஐசக் நியூட்டன் நீங்கதான்.. அது ஆப்பிளா, வடையா? அஸ்வினை கலாய்த்த நெட்டிசன்ஸ்!-வீடியோ

Subscribe to Oneindia Tamil

கிரிக்கெட் வீரர் அஸ்வின் டிவிட்டரில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளது. அதில் அவர் ஆப்பிள் சாப்பிடுவது போல வெளியிட்டு இருக்கும் புகைப்படம் மட்டும் வித்தியாசமான காரணம் ஒன்றிற்காக வைரல் ஆகியுள்ளது. அவரின் அந்த ஆப்பிள் புகைப்படத்தை பலரும் டிவிட்டரில் ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர். சிலர் அவர் சாப்பிடுவது உண்மையாகவே ஆப்பிள் தானா என்று குழம்பிப் போய் இருக்கின்றனர். இந்த நிலையில் ரசிகர்கள் அவருக்கு கிரிக்கெட் உலகின் ஐசக் நியூட்டன் என்ற புதிய பட்டம் கொடுத்துள்ளனர். ஒரே ஒரு சாதாரண புகைப்படம் இவ்வளவு வைரல் ஆகும் என்று அவரே நினைத்து இருக்க மாட்டார்.

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட் சாதனையை அடைந்த பின் அஸ்வின் ஓய்வுக்காக ஊர் சுற்ற தொடங்கி இருக்கிறார். இதற்காக மத்திய பிரதேசத்தில் இருக்கும் 'பென்ச்' புலிகள் ரிசர்வ் காட்டிற்குள் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளார். அதில் அவர் ஆப்பிள் சாப்பிடுவது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைபடம் வைரல் ஆகியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா