By : Oneindia Tamil Video Team
Published : November 27, 2017, 04:34
02:05
அஸ்வின், மின்னல் வேகத்தில் 300 விக்கெட் வீழ்த்தி சாதித்தது எப்படி?-வீடியோ
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் அவர் 300 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியுள்ளார்.
இதுதான் ஐசிசி டெஸ்ட் போட்டியில் ஒருவர் மிகவேகமாக எடுத்த 300 விக்கெட் ஆகும். ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் டென்னிஸ் லில்லி 56 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகள் எடுத்த சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
அஸ்வின் இன்று நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் சேர்த்து இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்து இருக்கிறார்.
அஸ்வின் முதல் இன்னிங்ஸில் எடுத்த முதல் விக்கெட்டே 'சிறந்த சம்பவமாக' இருந்தது. இலங்கை வீரர் திரிமன்னேவை குழப்பி பந்தை உள்ளே வீசி லெக் ஸ்டெம்பை காலி செய்தார். அஸ்வின் கிட்டத்தட்ட பல நாட்களுக்கு பின் எடுத்த விக்கெட் இதுதான். அவரது கொண்டாட்டத்தில் கூட பழைய அஸ்வின் போல இல்லாமல் ஒரு முதிர்ச்சி இருந்தது. ஷணன்காவை அவுட் செய்த அவரது இரண்டாவது விக்கெட்டிலும் இதேபோல ஆஃப் ஸ்டம்ப் பறந்தது.