By : Oneindia Tamil Video Team
Published : April 13, 2018, 06:11
03:43
காஷ்மீரில் ஆசிஃபா என்ற சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை
காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி ஆசிஃபா சில கொடூரர்களால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். இந்த கொலை மற்றும் வன்புணர்வு வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொலை சம்பவமும், அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொடுமைபடுத்தப்பட்டதும் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் இருக்கிறது. மிகவும் தாமதமாகவே இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது.