By: Oneindia Tamil Video Team
Published : November 15, 2017, 05:19

ஆஸி. வீராங்கனைைய பார்த்து வாய் பிளக்கும் கிரிக்கெட் உலகம்-வீடியோ

Subscribe to Oneindia Tamil

லெக் ஸ்பின் பவுலிங்கில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகம் எப்போதுமே சிறந்து விளங்கும். இதுவரை ஆண்கள் அணியில் மட்டும் சிறந்த லெக் ஸ்பின்னர்களை கொண்டு இருந்த ஆஸ்திரேலியா தற்போது பெண்கள் அணியிலும் ஒரு வரத்தை பெற்று இருக்கிறது.
ஆஸ்திரேலிய பெண்கள் அணியின் லெக் ஸ்பின் பவுலர் ஒருவர் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த பந்தை வீசியதாக பாராட்டப்பட்டுள்ளார். மேலும் இவர்தான் அடுத்த ஷேன் வார்னே எனவும் பாராட்டப்படுகிறார். அமண்டா ஜேட் வெல்லிங்டன் என்ற அந்த பெண் செய்த பவுலிங் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் பவுலிங் போலவே இருப்பதாக கூறப்படுகிறது

ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் 1993ல் நடத்த ஆஷஸ் தொடரில் ஷேன் வார்னே மிகச்சிறப்பான விக்கெட் ஒன்றை எடுத்தார். அந்த விக்கெட்டில் ஸ்டெம்பில் இருந்த மைக் உடைந்து விழுந்தது. கிரிக்கெட் வரலாற்றில் இன்று வரை அதுதான் ''தி பால் ஆப் தி செஞ்சுரி'' என்ற பட்டத்தை பெற்று இருக்கிறது.

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா