By : Oneindia Tamil Video Team
Published : March 30, 2018, 05:49

நடுரோட்டில் பாஜக உறுப்பினர் சராமரி வெட்டு.. ராம்நாட்டில் பரபரப்பு..வீடியோ

பாஜக செயற்குழு உறுப்பினர் பதவி வகிப்பவரும் ஆட்டோ ஓட்டுனருமான வீரபாகுவை மர்ம நபர்கள் நடு ரோட்டில் சராமரியாக வெட்டி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அண்மனை பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார் வீரபாகு. இவர் பாஜகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். நேற்று இவர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயணிகளை இறக்கி விட்டு அரண்மனை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது வழியில் இரு வாலிபர்கள் வீரபாகுவின் ஆட்டோவை நிறுத்தி சவாரி செய்துள்ளனர். ஆட்டோ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பயணம் செய்த இரு இளைஞர்களும் ஆட்டோவை நிறுத்தும்படி வீரபாகுவிடம் கூறியுள்ளனர். அப்போது வீரபாகு ஆட்டோவை நிறுத்திய போது அப்பகுதியில் மறைந்திருந்த மேலும் மூவர் வீரபாகுவை அரிவாள் கொண்டு நடு ரோட்டில் சராமரியாக வெட்டியுள்ளனர். உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து வெட்டு காயத்துடன் வீரபாகு ஓடி அப்பகுதி வழியாக வந்த அரசு பேருந்தில் ஏறி கொலையாளிகளிடம் இருந்து தப்பித்துள்ளார். வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிய வீரபாகுவை பேருந்தில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தலை, கை, கால்களில் வீரபாகுவிற்கு பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரபாகுவிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜக செயற்குழு உறுப்பினர் வெட்டுபட்ட சம்பவம் ராம்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா