By: Oneindia Tamil Video Team
Published : February 06, 2018, 02:44

தமிழிசை சவுந்தரராஜனை யாராலும் அசைக்க முடியாதுஏன்?-வீடியோ

Subscribe to Oneindia Tamil

எவ்வளவுதான் முட்டி மோதினாலும் தலைவர் பதவியில் இருந்து அசைக்கவே முடியாத லாபி பலத்துடன் தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறாரே என விரக்தியடைந்து போயுள்ளனராம் தமிழக பாஜக தலைவர்கள். பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசையை மாற்றுவதற்கு டெல்லிக்கு தொடர்ந்து காவடி தூக்குகிறார்கள் பிரமுகர்கள். ஆர்கே நகர் தோல்வியை முன்வைத்து எப்படியும் தமிழிசை விக்கெட்டை வீழ்த்திவிடலாம் எனவும் கணக்குப் போட்டது காவடி கோஷ்டி. ஆனால் டெல்லியில் செமையாக வாங்கிக் கட்டிக் கொண்டது இந்த வாய்ச்சவடால் கோஷ்டி. மீண்டும் தமிழக தலைவராக துடிக்கும் சீனியர் தலைவர் கூட டெல்லியிலேயே முகாமிட்டு காய்களை நகர்த்திப் பார்த்தார்.

என்னங்க நீங்களுமா இப்படி என அவரையும் கடிந்து கொண்டதாம் டெல்லி. தமிழிசையை தலைவர் பதவியில் இருந்து அசைக்கவே முடியாது போல என விரக்தியில் இருக்கிறது இக்காவடி அணி.

ஏனெனில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் குட்புக்கில் இருக்கிற டீமில் உள்ள தமிழக பிரமுகர்தான் தமிழிசைக்கு முழு ஆதரவு தந்து கொண்டிருக்கிறாராம். அத்துடன் மத்திய அரசு அண்மையில் கொடுத்த பணியின் மூலமாக தமிழிசைக்கு நிறைய அசைன்மெண்ட்டுகளை கொடுத்திருக்கிறதாம் டெல்லி. இப்போதைய நிலையில் தமிழிசையே பதவி வேண்டாம் என்றாலும் டெல்லி விடுவதாக இல்லையாம்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா