By: Oneindia Tamil Video Team
Published : February 08, 2018, 11:56

பரிதாபம்.. இறந்த தாயின் இறுதிச்சடங்கிற்காக பிச்சை எடுத்த மகன்கள்- வீடியோ

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் காளியப்பன். கூலி வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி விஜயா. இவர்களுக்கு மகன்கள் மோகன் (14), வேல்முருகன் (13), மகள் காளீஸ்வரி ஆகியோரும் உள்ளனர்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காளியப்பன் திடீரென இறந்து போனார்.
அவருக்கு திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு மார்பக புற்று நோய் ஏற்பட்டது. தனது மகள் காளீஸ்வரியை மட்டும் ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்து விட்டார். சிறுவர்கள் 2 பேரையும் வேலைக்கு அனுப்பி விட்டார். இதனிடையே விஜயாவுக்கு புற்று நோய் நாளுக்கு நாள் முற்றிப் போனது. எனவே அவர் படுத்த படுக்கையானார்.
தாயின் நிலையை கண்ட 2 சிறுவர்களும் நிலை குலைந்தனர். உறவினர்களிடம் எனது அம்மாவை காப்பாற்றுங்கள் என்று பணம் கேட்டு கெஞ்சினர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா