By : Oneindia Video Tamil Team
Published : October 23, 2018, 10:43
Duration : 00:58
00:58
வண்டலூர் வண்ணத்து பூச்சி பூங்கா ! குவியும் சிறுவர்கள்-வீடியோ
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள வண்ணத்து பூச்சி பூங்கா வர்தா புயலில் சேதம் அடைந்ததை அடுத்து அதன் மறு சீரமைப்புக்கு பின்னர் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து விடப்பட்டது
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அமைந்துள்ள வண்ணத்துப் பூச்சி பூங்கா கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் திறக்கப்பட்டது. 2.7 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் 200 வகையான தாவரங்கள் நடப்பட்டு 40 வகையான வண்ணத்து பூச்சிகள் வருகை புரிந்ததாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டுமே இவை வருகை தரும் நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தை தாக்கிய வர்தா புயலினால் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் அதற்காக அமைக்கப்பட்ட இல்லம் ஆகியவை வெகுவாக பாதிக்கப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்தது. இதனை அடுத்து கடந்த இரண்டு மாத
காலமாக வண்ணத்துப்பூச்சி பூங்காவை மறு சீரமைக்கும் பணிகள் நடைபெற்றதால் வண்ணத்து பூச்சி பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது இதனை தொடர்ந்து பூங்காவினை மறு சீரமைக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து வண்ணத்து பூச்சி பூங்கா பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது