By : Oneindia Tamil Video Team
Published : November 14, 2017, 11:33

தமிழ்நாடு வெதர்மேன் வானிலை அப்பேட்-வீடியோ

தற்போதுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் இன்று பெய்வதே கடைசி மழை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்று முழுவதும் பெரும்பாலான நேரம் தூறிக்கொண்டே இருந்தது.
இரவு நேரத்தில் மட்டும் அவ்வப்போது மிதமான மழை பெய்தது. இன்று காலை முதல் பெரும்பாலான இடங்களில் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். நாளை முதல் மழை குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.மேலும் வங்கக்கடலில் தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் இன்று பெய்வதே கடைசி மழையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடக்கு நோக்கி நகர்வதால் இதனால் இனி தமிழகத்திற்கு மழை கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X
தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா