• search
By : Oneindia Video Tamil Team
Published : March 12, 2018, 07:05
Duration : 01:54

கமலஹாசனை கவுதமியை வைத்து கலாய்த்த முதலமைச்சர் ஈபிஎஸ்- வீடியோ

சேலம் மாவட்டம் எடப்பாடியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பொது சேவையில் தாம் தொய்வடைந்தது கிடையாது எனக் கூறினார். பிற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு திட்டங்களை நிறைவேற்றுவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றும் உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.

தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ள நிலையில் அதற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக பலர் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை எங்களாலும் நிரப்ப முடியும் என தெரிவித்த முதல்வர் பட வாய்ப்பு குறைந்ததால் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துள்ளதாக கூறினார். தன்னுடன் நடித்த கவுதமிக்குக் கூட உரிய ஊதியம் வழங்காத கமலஹாசனால் தமிழக மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும் எப்படி என்றும் அவர் தெரிவித்தார்

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more