By : Oneindia Tamil Video Team
Published : May 05, 2018, 10:21

தேமுதிக அதிமுக மோதல்....பரபரப்பு...வீடியோ

கட்சி மாற மறுத்தவரை தாக்கி வீட்டை கொளுத்திய சம்பவத்தால் பரபரப்பு...

திருப்பத்தூர் மாடப்பள்ளியை சேர்ந்தவர் மாவீரன் மற்றும் மதுரை வீரன். இவர்கள் இருவரும் தேமுதிகவில் கிளை செயலாளராக உள்ளனர். அதேபகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் அதிமுகவில் உள்ளார். தேமுதிகவை சேர்ந்த இருவரையும் அதிமுகவில் சேரும்படி சூர்யா கூறியுள்ளார். அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்ததால் அவர்களுக்குள் மோதல் வெடித்துள்ளது. இந்நிலையில் நேற்று மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் சராமரியாக தாக்கி கொண்டுள்ளனர். மோதலில் படுகாயம் அடைந்த மதுரை வீரன் மற்றும் மாவீரன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யா தன் ஆட்களுடன் சென்று வீட்டிற்கு தீவைத்ததுடன் வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேமுதிக மற்றும் அதிமுகவினருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா