By : Oneindia Tamil Video Team
Published : April 09, 2018, 06:37

சாலையில் மண்டியுள்ள புதர்கள்-வீடியோ

தமிழக கேரளா எல்லையான குமுளி மலைச்சாலையின் இரு புறங்களிலும் உள்ள செடி கொடிகளை வட்டராக போக்குவரத்து அதிகாரி தலைமையில் வனத்துறை அதிகாரிகளுன் இணைந்து கல்லூரி மாணவர்கள் அகற்றினர்

தேனி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு செல்லும் முக்கிய வழிகளில் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது குமுளி மலைச்சாலை.இந்த மலைச்சாலையில் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரு புறங்களிலும் செடி கொடிகள் அதிக அளவில் வளர்ந்து சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்காக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகளை மறைத்துவிட்டதால். சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் விபத்துக்களும், அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.இதனை போக்கும் விதமாக தேனி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் வனத்துறையிருடன் இணைந்து உத்தமபாளையம் தனியார் கல்லூரி மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் மலைச்சாலையில் இருபுறங்களிலும் உள்ள செடி கொடிகளை அகற்றினர்.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

தமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா